சபையும் அதன் நிலையும் THE CHURCH AND ITS CONDITION 56-08-05 வில்லியம் மரியன் பிரான்ஹாம் சபையும் அதன் நிலையும் THE CHURCH AND ITS CONDITION 56-08-05 பிரான்ஹாம் கூடாரம்,ஜெபர்ஸன்வில் இந்தியானா, அமெரிக்கா. 1. ஒரு குழந்தையின் அபூர்வமான வியாதியைக் குறித்து இன்று காலை ஜெபத்தில் முக்கியமாக வேண்டிக்கொள்வோம். நாமெல்லாரும்..... நிச்சயமாக... ஜெபிக்க முற்படுகிறோம். அது என்ன வியாதி என்று டாக்டர்களுக்கே தெரியாது.... வியாதிக்கு ஏதோ ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அது ஒரு இடப்பட்ட பெயர். ஆனால் அது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. அது என்ன என்பதைக் கிறிஸ்து அறிந்திருக்கிறார். என்னைக் கேட்டால் - அது ஒரு பிசாசு. டாக்டர்கள் விரும்பின பெயரைக் கொடுத்திருக்கிறார்கள். அது அவர்களைப் பொறுத்தது. ஆனால் இந்த வியாதி அசுத்த ஆவியினால் வந்தது. அவன் ஒரு அசுத்த ஆவி. விளங்குகிறதா? நாமெல்லாரும் இப்பொழுது ஒன்று சேர்ந்து ஒரு தடவை "நம்பிடுவாய்'' என்று பாட்டைப் பாடுவோம். "நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைக்கூடுமே, நம்பிடுவாய் நம்பிடுவேன், நம்பிடுவேன் எல்லாம் கைக்கூடுமே நம்பிடுவேன்'' 2. கர்த்தர் உன்னை சுகமாக்கப் போகின்றார் சகோதரியே. நாம் எல்லாரும் நமது தலைகளை வணங்கி இச்சிறுமிக்காக ஜெபிப்போம். 3. பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே. இந்தச் சிறுமி மரிக்கிறாள். இவளைவிட்டு முன்னோக்கிப் பிரசங்கம் செய்யக் கூடாமல் இருக்கிறேன். இவள் உம்முடைய சிருஷ்டிப்பு. இவள் தன் ஜனங்களால் நேசிக்கப்பட்டவள். சாத்தான் இவளுடைய வாலிப உயிரைத் திருடப் பார்க்கிறான். சாத்தானின் மரணக் கையை நீர் நிர்மூலமாக்கக் கிறிஸ்துவின் நாமத்திலே வேண்டிக் கொள்கிறேன். செங்கடலைப் பிளந்து, இருபுறமும் மதிலாக்கி, நீர் இஸ்ரவேலரைக் கடலின் தரை வழியாய் நடத்தின தேவன். தேவனே, இன்று நீர் எல்லா தடைகளையும் நீக்கி இந்தக் குழந் தையை வாழவிடும். கேளுங்கள் என்றீர். நாங்கள் உம்மை நம்பி யிருக்கும் கூட்டம். இந்தக் குழந்தையை சுகப்படுத்த இயேசுவின் நாமத்தினாலே வேண்டிக் கொள்கின்றோம். ஆமென். 4. இன்று நான் நன்றியுள்ள இருதயத்துடன் மறுபடியும் உங்களிடம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே வந்துள்ளேன். லூசியானாவிலிருந்து சிறிது முன்னதாக வந்து ஞாயிறு காலை வேதாகம வகுப்பு நடத்தலாமென்று இருந்தேன். அங்கே சீதோஷ்ண நிலை மோசமாக இருந்தது. ஏர்கண்டிஷன் இருந்தாலொழிய நாம் இங்கே மின்சார விசிறியின் கீழ் உட்கார்ந்திருக்கிறது போல, லூசியானாவிலே முடியாது. இன்று காலை இங்கே சற்று குளிர்ச்சியாக இருக்கிறது. அங்கே உட்கார்ந்தால் மயக்கம் தான் வரும். 5. இரண்டொரு நாட்கள் இளைப்பாறிவிட்டு, கனடா தேசத்தின் வடக்குத் திசையிலுள்ள ஸஸ்கட்சீவ், பிரின்ஸ் ஆல்பர்ட் முதலிய இடங்களிலும், (சிவப்பு) இந்தியர் நடுவிலும், எஸ்கிமோக்கள் நடுவிலும் சாட்சி கொடுக்கப்போகிறேன். சாலைகளற்ற ஊர்களுக் கும் பனிக்கட்டி நிறைந்த ஊர்களுக்கும் தூது கொண்டு போகிறேன். கனடா தேசத்தின் பல பாகங்களிலிருந்தும் வார்த்தையைக் கேட்க ஜனங்கள் வருவார்கள். மேற்கு கனடா ஜனங்கள் தங்களுக்காக ஜெபம் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அங்கே தேவன் தமது ஜனங்களைச் சந்தித்து, தம் மகிமைக்காக, பலத்த கூட்டங்களை நடத்த நாம் வேண்டிக்கொள்வது அவசியம். சுமார் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன் நான் கனடா சென்றிருந்தேன். மேன்மையான நண்பர்களும் ஜனங்களும் எனக்கு அங்கே உண்டு . 6. அவர்கள் உண்மையான சபைப்பிரியர்கள். எவ்வளவுதான் குளிர் இருந்தாலும் கம்பளி போர்த்திக்கொண்டு குதிரை மேல் ஏறி 30 மைல் தூரம் பிரயாணம் செய்து சபைக்கு வருவார்கள். பனிக்கட்டிகள் மேல் நடந்து வருவார்கள். சிறுவர்களும் பெரியவர்களுமாய் வருவார்கள், குடும்பம் குடும்பமாக வருவதுண்டு. ஒரு குடும்பமானது ஒரு இடத்தில் கூடி பிறகு நடக்க ஆரம்பிக்கும். அதுதான் தியாகம். இத்தகையத்தியாகத்தால் அவர்கள் இவ்வூழியத்திலிருந்து நிறைய பலனைப் பெறுகின்றனர். தியாகம் இல்லையானால் ஊழியமும் இல்லை! நீ சிரமப்பட்டு ஊழியம் செய்தால் கஷ்டம் இருந்துதான் தீரும். ஒன்றைப் பெற மற்றொன்றைத் தியாகம் செய்வது அவசியம். உண்மையாகவே உன்னை பாதிக்கக்கூடிய சில காரியங்களை அப்புறப்படுத்த வேண்டும். வேலையை நிறுத்த வேண்டும். நீ சபைக்குச் செல்ல இதை, அதை செய்ய வேண்டும். அப்போதுதான் நீ சபைக்குச் சென்று தேவனை நேசிக்கிறாய் என்பதைக் காட்ட முடிகிறது. அப்படிச் செய்வதில் நீ ஆசீர்வாதம் பெறுகிறாய். 7. நான் செய்த ஒரு தியாகம் ஞாபகத்துக்கு வருகிறது. நான் சிறுவனாயிருந்த போது கிறிஸ்துமஸ் பண்டிகையன்று எனக்குத் துணி கிடைத்ததில்லை. என் தாய் திண்பண்டங்களை வாங்கி ஒரு பையிலிட்டு கொண்டு வந்து தலைக்கு இரண்டு - மூன்று துண்டுகளைக் கொடுப்பாள். ஊத ஒரு தகரத்தாதை அல்லது தகரத் துப்பாக்கி என் கிறிஸ்துமஸ் பரிசாக இருந்தது. அக்கம் பக்கத் திலிருந்த பெற்றோர் தமது குழந்தைகளுக்குத் துணி சைக்கிள் முதலியவற்றைக் கொடுப்பர். அப்போது "எனக்குக் குழந்தைகள் பிறந்தால், பட்டினியாக இருந்தாவது என் குழந்தைகளுக்கு வேண்டியதையெல்லாம் வாங்கிக் கொடுப்பேன்" என்று கூட நான் முடிவு செய்ததுண்டு. என் தியாகத்தால் தேவன் என் குழந்தைகளிலிருந்து ஏக்கத்தை அகற்றினார். அதாவது நான் தகப்பனான போது, ஒரு கிறிஸ்துமஸ் நாளில் என் மகன் பில்லி பவுலுக்கு மூன்று சக்கர வண்டி ஒன்றையும், ஒரு வில்லையும், சில அம்புகளையும் வாங்கினேன். என் மகளுக்குத் துணி எடுக்க வைத்திருந்த பணத்தையும் இந்தப் பரிசுகளை வாங்கச் செலவிட்டேன். பரிசுகளை என் மகனுக்குக் கொடுத்தால் அவன் அவைகளைவிட்டு தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு கோலையும், ஒரு கரண்டியையும் பிடித்து ஒரு குழியைத் தோண்டுவதைக் கண்டேன். பார்த்தீர்களா? 8. வேண்டியவைகளையெல்லாம் கொடுத்தால் அவைகளை யாரும் அக்கரையாக அனுபவிப்பதில்லை, உலகப்பொருட்கள்! சகோ. ராய் பாடர்ஸ் என்பவரும் தன் சொத்து சுதந்திரத்தை விட்டு இன்று "உரைக்கப்பட்ட வார்த்தை'' செய்திகளை அச்சிட்டு வெளியிடுகின்றார். எல்லாவற்றையும் அனுபவிக்காதத் தியாகம் சிலவற்றை நாம் தினந்தோறும் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இது தேவனருகில் நெருங்கி வரப்பயன்படுகிறது. இவ்வளவு புழுக்கத்திலும் நீங்கள் இந்தக் கட்டிடத்தில் உட்கார்ந்திருப்பதும் தியாகமே, நாம் இங்கே உட்கார்ந்து கொண்டு, தம் உயிரையும் தியாகம் செய்து நம்மை இரட்சிக்க உலகத்துக்கு வந்து இயேசு கிறிஸ்துவை கவனிப்போம். அது மாத்திரமல்ல, அவருடைய ஆத்துமா மூன்று பகல் மூன்று இரவு நரகத்தில் இருந்ததையும் நினைவு கூருவோமா, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து தேவனுடைய வலது பக்கம் உட்கார்ந்தார். அவருடைய தியாகத்தால், அவர் மூலம் நமக்குத் தேவகிருபை அளிக்கப்படுகிறது. 9. நாங்கள் கனடாவுக்குப் போகிறோம். அங்கே அநேக ஏழை கள் உள்ளனர். உண்மையிலே ஏழைகள். கூட்டத்துக்கு வரும் செலவுக்கு தங்கள் பசுமாடுகளையும், ஆடுகளையும் விற்க நேரிடும். எஸ்கிமோக்கள் தங்கள் குடும்பங்களை அழைத்துவர குளிருக்கு உடுத்த வைத்திருக்கும் தோலை விற்கவேண்டியதாகும். (சிவப்பு) இந்திய வியாபாரிகளும் அப்படியே செய்ய நேரிடும். நாம் குறைந்த பட்சம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டுமல்லவா? பெரிய சத்தியங்களை அவர்களுக்கு வெளிப்படுத்த தேவனை வேண்டிக் கொள்வது நமது கடமை. 10. புழுக்கமாக இருக்கிறது. நான் உங்களை இங்கே அதிக நேரம் நிறுத்திவைக்கப் போவதில்லை. வியாதியஸ்தருக்காக ஜெபிக்கு முன் ''சபையும் அதன் நிலையும்'' என்பதைச் சற்று பார்க்க விரும்புகிறேன். சில நாட்களுக்குமுன் லூசியானாவைச் சேர்ந்த ஷிரீவ் போர்டு நகரத்திலே சாட்சிக்கொடுக்க எனக்கு ஒரு தலைப்பு அளிக்கப்பட்டது. ''சபையின் நிலை" நான் அங்கே பிரசங்கித்ததையே இங்கேப் பிரசங்கிக்கப் போவதில்லை. இன்று தேவன் வார்த்தையைக் கொடுத்து உதவிச் செய்ய வேண்டிக்கொள்ளப் போகின்றோம். இந்த வேதாகமம் மிகப்பழையது. ஆனால் இதில் நித்திய ஜீவனை அடைய வழி சொல்லப்பட்டிருக்கிறது. 11. வார்த்தை தேவனாயும், தேவன் வார்த்தையாயும் இருக்கிறார் என்பது ஞாபகமிருக்கட்டும். நாமும் நம்முடைய வார்த்தையினாலே அறியப்படுகிறோம். சில சமயம் சில காரியங்களைச் செய்ய முடிவு செய்கிறோம். ஆனாலும் அதை செய்யக் கூடாமற் போகிறோம். தேவன் அப்படி இல்லை. அவர் ஆதியிலிருந்து அந்தம் வரை அனைத்தையும் அறிந்தவர். துவக்கத்துக்கு முன்பே அவர் முடிவை அறிந்தவர். 12. இல்லையென்றால், தான் கூறப்போகிற ஒன்றிற்கு பின் பலமாக இருப்பேன் என்று அறியாமல் ஒரு காரியத்தையும் உரைக்கமாட்டார். ஆபிரகாம் நூறு வயதாக இருந்தபோது இல்லாததை இருக்கிறது போல விசுவாசித்தான். (இதை நான் வியாதியஸ்தரின் விசுவாசத்துக்கென்று கூறுகின்றேன்) தேவன் தான் சொன்னதை நிறைவேற்றுவார் என்ற விசுவாசத்தில் அவன் இல்லாததை இருக்கிறது போல நம்பினான். ஆபிரகாம் 75 வயதும் சாராள் 65 வயதுமாக இருக்கையில் தேவன் அவர்களுக்கு "நீங்கள் ஒரு குமாரனைப் பெறுவீர்கள்'' என்றார். அது ஒரு முடியாத காரியமாகத் தோன்றிற்று. ஆனால் ஆபிரகாம் குழந்தையை எதிர் பார்த்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆபிரகாம் 100 வயதும் சாராள் 90 வயதுமாக இருக்கையில் குழந்தையை பெற்றெடுத்தார்கள். இல்லாததை இருக்கிறது போல விசுவாசித்ததாலே இப்படி நடந்தது. 13. இதை வியாதியஸ்தருக்காகச் சொல்லுகிறேன். எப்பேர்ப்பட்ட கஷ்டத்தினால் நீ துக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், நீ கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தையையும் ஏற்றுக்கொள்ளும் போது இல்லாததை இருக்கிறது போல விசுவாசிக்க வேண்டும். தேவன், "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் " என்றார் (யாக் 5:15). தேவனே இதைக் கூறினார். வாக்குவாதத்துக்கு இடமில்லை. அவர் சொன்னதே சரி. நமது எண்ணங்களையும், விசுவாசத்தையும், நமது செய்கைகளையும் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தையின் மேல் அஸ்திபாரப்படுத்தல் வேண்டும். நாம் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது அது நிறைவேறித் தீருகிறது. 14. இவ்வண்ணமேதான் நமக்கு இரட்சிப்பும் கிடைக்கிறது. இருதயத்தில் ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கிறோம். தேவன் முன் நீதிமான்களாய் நடக்கிறோம். இயேசுவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறோம். இங்கே நீ உன்னைப் பாவி என்று அறிவாயானால் முதலாவது தேவனைத் தேடு. அவரை உன் இரட்சகராக ஏற்றுக் கொள். அப்போது உன் வியாதி தீரும். உன் முழு விசுவாசத்தையும் உன் பாரத்தையும் நிறைவான கிறிஸ்து இயேசுவின் மீது வை. மற்றதெல்லாம் உனக்குக் கைக்கூடி வரும். 15. வியாதியஸ்தரே, உங்களுடைய கவனத்தை இந்த வார்த்தையின்மேல் வையுங்கள். இக்காலை வேளையிலே நான் ''சபையும் அதன் நிலையும்'' என்ற தலைப்பில் பேசப்போகிறேன். தெய்வீக சொஸ்தப்படுத்துதல் அதிசயமானதுதான். ஆனாலும் அதற்கு நேரத்தை செலவழிப்பதைக் காட்டிலும் மனிதனுடைய ஆத்துமா வுக்குப் பிரசங்கிப்பது மேலானது. ஷிரீவ்போர்டு நாட்டிலே 11 நாள் கூட்டம் நடத்தினோம். அதில் 3 அல்லது 4 குணப்படுத்தும் கூட்டம் மாத்திரமே நடத்தினோம். வியாதியுள்ள சரீரத்தைத் தேவன் குணப்படுத்துகிறார். இது உலகம் முழுவதிலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் (இரட்சிக்கப்பட்ட) ஆத்துமா என்றும் மரிக்காது. சரீரம் மரிக்கும். பாவம் செய்த ஆத்துமா மரிக்காமலிருக்க தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அவர்முன் நீதிமானாய் நடத்தல் வேண்டும். 16. இப்படி நான் பல தடவை கூறியுள்ளேன். என் ஆத்துமா இரட்சிக்கப்படவேண்டும். கடைசியாக நான் யோர்தான் நதியைக் கடக்கும் போது எனக்குத் தடையொன்றும் இருக்கக் கூடாது. டிக்கட் என் கையில் இருக்கவேண்டும். பவுலும் வாசிக்கப்பட நான் காத்துக் கொண்டிருக்க வேண்டும். பவுலும் இப்படியே செய்தான். சகோதரனே, உயிர்த்தெழுதலின் பலத்திலே நான் அழைப்பு வரும்போது, நான் கல்லறையை விட்டு வெளியே வர வேண்டும். ஏனென்றால் நான் அவரை உயிர்த்தெழுதலின் வல்லமையில் அறியவேண்டும் 17. பரிசுத்த வேதாகமத்தை நமக்கு எழுதி தந்தவருக்கு நாம் நமது தலைகளையும் இருதயங்களையும் சாய்த்து ஜெபம் செய்வோமாக. 18. எங்கள் பிதாவாகிய தேவனே, நீர் உமது வார்த்தையை எங்களுக்கு விளக்கித்தர வேண்டுகின்றோம். நாங்கள் புஸ்தகங்களின் பக்கங்களைப் புரட்டினாலும் உம்முடைய பரிசுத்த ஆவி விளக்கங்கொடுத்தாலொழிய சத்தியம் எங்களுக்கு விளங்காது. இக்காலை வேளையிலே எங்களுக்கு உம்முடைய வார்த்தையை விளக்கி, அளவற்ற உமது கிருபையை எங்களுக்கு அருளும். நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் வார்த்தையில் நுழைந்து மனிதனுடைய உதடுகளின் மூலம் இங்குள்ள எல்லா இருதயங்களுக்கும் தேவைக்கு தக்கவாறு எங்களுக்குச் சத்தியத்தை அருளட்டும். ஆராதனைகள் முடிந்தவுடன் நாங்கள் வீடுகளுக்குத் திரும்ப ஆயத்தமாயுள்ளோம். நாங்கள் தாழ்மையுடன் எங்கள் தலைகளைச் சாய்த்து உமக்கு நன்றி செலுத்து கின்றோம். கிறிஸ்துவின் நாமத்திலே வேண்டிக்கொள்கின்றோம். ஆமென். 19. உங்களிடம் வேதாகமம் இருக்குமானால், யோவான் முதலாம் அதிகாரத்திலிருந்தும் என்னுடன் வாசியுங்கள் (அல்லது வசனத்தைக் குறித்துக்கொள்ளுங்கள்) வாசித்ததும் ஜெபிக்கலாம். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை நமக்கு போதிப்பார். நாம் வார்த்தையைப் படிக்கிறோம். படிக்கத் தெரிந்த வர்கள் எல்லாரும் படிக்கலாம். ஆனால் தேவன்தான் பொருளை விளக்கமுடியும். வேத வாக்கியத்தை நாம் படிக்கக் கூடும். ஆனால் விளக்கம் தேவனிடத்திலிருந்துதான் வருகிறது. யோவான் முதலாம் அதிகாரம் 28 முதல் 32 வரை வாசிப்போம். "இவைகள் யோர்தானுக்கு அக்கரையிலே யோவான் ஞானஸ் நானங்கொடுத்த பெத்தபராவிலே நடந்தன. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. எனக்குப்பின் ஒருவர் வருகிறார். அவர் எனக்கு முன்னிருந்த படியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். நானும் இவரை அறியாதிருந்தேன்: இவர் இஸ்ரவேலுக்கு வெளிப் படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன் என்றான். பின்னும் யோவான் சாட்சியாக சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்'' முப்பத்து இரண்டாம் வசனத்தை மறுபடியும் வாசிக்க விரும்புகிறேன்: ''பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது. ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்து இறங்கி: இவர் மேல் தங்கினதைக் கண்டேன்.'' 20. கர்த்தர் தமது ஆசீர்வாதத்தை இவ்வசனத்துடன் கூட்டுவாராக. ஒவ்வொரு வார்த்தையையும் நன்றாகப் பிடித்துக்கொள்ளுங்கள். பின்னால் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு என் சத்தம் கேட்கிறதா? கேட்கிறதென்றால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். நல்லது. 21. இன்று காலை உங்களிடம் உவமைகளைப் பற்றி பேசப் போகிறேன். முதல் தடவை ஆலயத்துக்கு வந்திருப்பவரும் விளங்கிக் கொள்ளுமாறு பேசுவேன். நம்மைத் திருத்திக்கொள்ள ஆலயத்துக்கு வருகிறோம். நம்மை மேலான ஜனங்களாக்கிக் கொள்ள வருகிறோம். நல்ல கிறிஸ்தவர்களாக, நல்ல மக்களாக, நல்ல தகப்பன்களாக, நல்ல தாய்களாக, நல்ல அயலானாக கற்றுக் கொள்ள இங்கே வருகிறோம். அவர் நாமத்தில் நாம் இரண்டு மூன்று பேர்கூடி எதைக் கேட்டாலும் தருவேன் என்று கிறிஸ்துவே கூறியுள்ளார். நாம் சபையாகக் கூடியிருக்கிறோம் என்பதை அறிவதைவிட அவர் நாமத்தில் நாம் நம்மைத் திருத்திக் கொள்ள வந்திருக்கிறோம் என்பதை அறிவது மேலானது. நமது அறிவை அதிகமாக்கிக் கொள்ள வந்திருக்கிறோம். உங்களில் எத்தனைபேர் இப்படிச் சொல்லக்கூடும்? அவரை இன்னும் அதிகமாக அறிய வந்துள்ளவர்கள் எத்தனை பேர் பார்ப்போம்? நாம் நன்றாக விளங்கிக் கொள்ள விளக்கம் கர்த்தரின் வார்த்தையிலிருந்து வரவேண்டும். பசியாயுள்ள ஆத்துமாக்களைப் போஷிக்க தேவன் வார்த்தையைக் கொடுத்திருக்கிறார். தேவ வார்த்தையை எடுத்து ஊட்டி வளர்க்க தேவன் பரிசுத்த ஆவியை அனுப்பியிருக்கிறார். விளங்குகிறதா? நமது தேவைக்குத் தக்கவாறு வார்த்தையை விளக்கிக் கொடுக்கப் பரிசுத்த ஆவியானவர் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறார். தேவன் இப்படி செய்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன். உங்களுக்குச் சந்தோஷமில்லையா? அவர் நம்மைப் போஷிப்பார். 22. நாம் அவருடைய மந்தையின் ஆடுகள். (இதைக் குறித்து நாம் சீக்கிரம் பேசக் கேட்போம்) நாம் தேவனுடைய ஒரு பட்டி ஆடுகளாம். அவருடைய கட்டுப்பாட்டில் நாம் நடந்தால், அவர் நம்மை நடத்துவார். 23. இயேசுவைத் தேவன் உலகத்துக்கு அனுப்பினபோது, ஒரு மிருகத்தின் மாதிரியாக அவரை அனுப்பியதில் மகிழ்ந்தார். அந்த மிருகம் - செம்மறியாட்டுக்குட்டி. ஏதேன் தோட்டத்துக்கு வெளியே ஆபேல் ஒரு ஆட்டுக்குட்டியை கொடுத்தான். அது தேவ ஆட்டுக்குட்டியான இயேசு சிலுவையில் தொங்கி பலியானதன் சாயலாக இருந்தது. "தேவன் இயேசுவை மிருகத்தின் மாதிரியாக ஏன் அனுப்ப வேண்டும்?'' என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆட்டுக்குட்டியானது மற்ற மிருகங்களை விடச் சாதுவானதும் சாந்தமானதுமாயிருக்கிறது. சுபாவத்தில் ஆட்டுக்குட்டியைப் போல மற்ற மிருகங்கள் இல்லை. மேய்ப்பனால் நடத்தப்படும் சுபாவம், ஆட்டுக்குட்டி களங்கமற்றது, கர்வமற்றது, சாந்தமானது. அது முரட்டுத்தனம் வாய்ந்ததல்ல. ஏழ்மையானது, தாழ்மையானது, சிறியது. தேவன் கிறிஸ்துவின் மூலமாக உலகத்திற்கு தம்மை ஒரு ஆட்டுக்குட்டியின் மூலம் வெளிப்படுத்தினார். 24. தேவன் பிதாவாகிய தேவன், யேகோவா தம்மைத்தாமே பரலோகத்திலிருந்து வெளிப்படுத்தின போது ஆகாயத்துப் பறவைகளிலே மிக்க சாதுவானதும் தாழ்மையானதுமான புறா - புறாவிலே வெளிப்படுத்தினார். பறவைகளிலே புறாவைவிட சாது வானது இல்லை. நான் பறவை இனங்களை ஆராய்ந்து பார்த்தேன். ஆகாயத்தில் பறக்கும் அத்தனை பறவைகளிலும் புறாவின் ஜீவியம் விந்தையானது. புறா ஒரு காதலன். அது சாதுவானது. அதன் சரீரத்தில் பித்தநீர் இல்லை. பறவை ஜாதிகளிலே புறாவில் மாத்திரம் பித்தநீர் இல்லை. அதனால் தான் புறா, எங்கே தானியமும் விதையும் இருக்கின்றனவோ, அங்கே மாத்திரம் காணப்படும் அது மற்ற இடங்களுக்குப் போவதில்லை. 25. நோவாவின் பேழையிலும் ஒரு புறா இருந்தது. புறாவானது பரிசுத்த ஆவிக்கு மாதிரியாக வேதாகமத்தில் பல தடவை கூறப்பட்டுள்ளது. அவ்வண்ணமே ஆட்டுக்குட்டியும் கிறிஸ்துவாக வேதாகமத்தில் பல தடவை குறிக்கப்பட்டிருக்கிறது. (ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை) அப்படியேதான் புறாவும் குறிக்கப்பட்டுள்ளது. 26. ஆதியாகம குறிப்பின்படி நோவாவின் பேழையில் பல பறவைகளுடன் புறாவும் இருந்தது. அங்கே ஒரு அண்டங் காக்கையும் (Raven) இருந்தது. காகம் மற்றப் பறவைகளைவிடக் கேவலமானது. அது நீண்ட வயதுடையது. சுமார் 300 ஆண்டுகள் வரை வாழ்கிறது என்று விஞ்ஞானிகள் அனுமானிக்கிறார்கள். கிளிக்கு வயது காகத்தைவிட அதிகமாம். 27. புறா ஒரு பித்தமற்ற பறவை. காகம் பிணத்தையும் தின்னும், புறாவை பிணத்தினருகில் காணமுடியாது. புறா நாற்றத்தைத் தாங்குவதில்லை. நாற்றத்தால் புறாவுக்கு தலைச் சுற்றும், அழுகிய எந்தப் பொருளையும் புறா தீண்டாது. அவைகளைத் தின்னவும் செய்யாது. ஏனென்றால் பித்தநீர் வயிற்றினுள் செல்லும் போது மாத்திரமே ஒரு உணவு ஜீரணமாகின்றது, ஆனால் வயிற்றினுள் சென்று ஜீரணம் செய்கின்ற பித்தநீர் புறாவிற்கு இல்லை, ஆதலால் அதைத்தின்றால், அதே நாளில் புறா மரிக்கும். சுத்தமானவைகளையும் தேகத்துக்கு ஏற்ற பொருள்களையும் மாத்திரமே புறா தின்னும். 28. காகம் வித்தியாசமானது. கூர்ந்து பார்ப்பின், காகம் ஒரு மாய்மாலக்காரனுக்குச் சமம் (Hypocrite) காக்கை பிணத்தைத் தின்றுவிட்டு, வயலுக்குச் சென்று தானியத்தையும் தின்னும். ஆனால் புறாவிற்கோ, தானியத்தை சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு செத்த பிணத்திற்கு மேல் பறந்து செல்ல முடியாது. 29. அவ்வண்ணமே, ஒரு போலி அவிசுவாசி கர்த்தரின் பந்தியிலும் பிசாசின் பந்தியிலும் பங்கெடுப்பான். மறுபிறப்பு பிறந்து விசுவாசி தப்பிதங்களைப் பொறுக்கமாட்டான். சத்திய வார்த்தை அவனுக்கு ஆகாரமாய் இருக்கும். அதைக் குறிப்பாக கொள்ளுங்கள். கவனி . ஒருவன் சினிமாவுக்குப் போகிறான். சாராயம் குடிக்கிறான். பாவத்தில் வாழ்கிறான். பின்னர் சபையில் வந்து பரிசுத்தவானைப் போல துதிபாடி கூச்சலிடுகிறான். தோட்டியைப் போல குப்பையிலும் வீட்டிலுமாக வாழ்கிறான். உண்மையான கிறிஸ்தவன் அப்படிச் செய்வதில்லை. அவன் மரணத்திலிருந்து ஜீவனுக்கு வந்தவன், பாவம் செய்தால், அது அவனை விடாது. ஆக அவன் பாவம் செய்யமாட்டான். அவன் பாவத்தைப் பற்றி நினைக்கவே மாட்டான். பாவத்துக்குத் தன்னை மறைத்து வாழ்வான். எவ்வளவு நேர்த்தியான கிறிஸ்தவன்! 30. ஆட்டுக்குட்டி ஒரு சாதுவான சிறு மிருகம். தானே தனக்கு உதவி செய்து கொள்ள முடியாத மிருகம். அது உதவியைச் சார்ந்து இருக்கிறது. ''உலாவும் காவலனாக'' நான் பணியாற்றின காலத்திலே ஒரு புல்வெளி வழியாய் காரோட்டிச் சென்றேன். ஒரு ஆட்டுக்குட்டி மந்தையிலிருந்து தவறிப்போய் ஒரு முட்கம்பி வேலியில் மாட்டி கதறி அழுது கொண்டிருந்தது. அதை எடுத்து காரில் வைத்து, சுமார் அரை மைல் தூரத்தில் சென்றுகொண்டிருந்த மந்தையில் விட்டேன். அந்த ஆட்டுக்குட்டியை நான் கம்பி யிலிருந்து விடுவிக்காதிருந்தால், காக்கை அதன் கண்களைக் கொத்தி தின்றுவிட்டிருக்கும். ஆட்டுக்குட்டியைத் தப்புவித்து என் கைகளில் ஏந்திக்கொண்டு சென்றேன். அது என்னிடம் வர மறுக்கவில்லை. அதைத் தூக்கி எடுத்ததும் அழுவது நிறுத்தி விட்டது. அதை யாரும் தொட்டுக்கூட இருக்க மாட்டார்கள். இருந்தபோதிலும், தூக்கி எடுக்கும் போது அது அதிர்ச்சியடை யவில்லை. உதவிக்கு வாஞ்சையாயிருந்தது. உங்களுக்கு விளங்கு கிறது என்று நம்புகிறேன். அது என்னிடமிருந்து ஓடப் பார்க்கவில்லை. என்னை உதைக்கவும் இல்லை. கடிக்கவுமில்லை. செம்மறியாட்டுக் குட்டிகள் உதைப்பதில்லை. அவைகள் தாழ்மையான மிருகங்கள். இந்த ஆட்டுக்குட்டியை அந்த மந்தையில் விட்டதும் சில நிமிடங்களுக்குப் பிறகு அதன் தாய் அதைக் கண்டது. தாயினிடம் வந்து சேர்ந்த குட்டிக்கு என்ன சந்தோஷம்! இது தேவாட்டுக் குட்டிக்கு அடையாளமாய் இருக்கிறதல்லவா? 31. "வெள்ளாட்டைக் கொல்ல வந்தால், அதன்வாயும் அடிக்கும் காலும் அடிக்கும்'' என்பதைக் கேட்டிருக்கிறீர்களா? ஒரு வெள்ளாட்டையும் ஒரு செம்மறியாட்டையும் வெட்டக்கொண்டு போனால், வெட்டும்படி கத்தியை உயர்த்தினதும், வெள்ளாடு செம்மறியாட்டை கத்தியின் பக்கம் தள்ளிவிட்டு ஓடப்பார்க்கும் பாருங்கள்? 32. வெள்ளாடு செய்வது போலத்தான் சாத்தானும் செய்கிறான். தேவனுடைய பிள்ளைகளை மயக்கி மரணத்துக்கு வழிகாட்டி, சாவு வந்ததும் அவர்களை அங்கே மாட்டிவிட்டு ஓடிப்போகிறான் சாத்தான் செய்யும் ஏமாற்றம் அது. சில சமயங்களில் அழகாகக் காணப்படும் ஒரு நவநாகரீக சிறிய பெண் அல்லது ஒரு பாக்கெட் சிகரெட்டு அல்லது ஒரு பாட்டில் விஸ்கியுடன் காணப்படும் ஒரு நவநாகரீக பையன் அந்த சிறு பெண்ணை ஒரு ஆட்டுக்குட்டியைப் போல தவறான வழிக்கு அழைத்துச் செல்வான். "ஓ, அதெல்லாம் சரிதான், சபை சொல்லும் அந்த காரியங்களில் ஒன்றுமில்லை" இத்தகையை சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கும் விசுவாசிகளே, நீங்கள் மந்தையிலிருந்து பிரிந்து சாத்தானிடம் போவது உங்களுக்கு மரணம் என்பதை அறிந்து அவனை விட்டுத் திரும்பி வாருங்கள்! ஆனால், அந்த பையனை திடீரென்று மரணம் தாக்கும் போது அவன் ஐய்யோ குய்யோவென்று கதறி தேடி தேசமேல்லாம் அலைவதைக் காண்பீர்கள். அது பிசாசு காட்டும் வழி! 33. ஆனாலும் செம்மறியாட்டுக்குட்டி தாழ்மையாக வழி நடத்தப்படும். ஆக, தேவன் கிறிஸ்துவை ஆட்டுக்குட்டியாகவும் தம்மை புறாவாகவும் வெளிப்படுத்தினார்! யோவான் ஸ்நானன் யோர்தான் நதியிலே இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த நாளிலே, ஒரு பலத்த அடையாளம் நடந்தது. மிகத் தாழ்மையான தேவ ஆட்டுக்குட்டி கீழே நிற்க, மிக்க சாந்தமான புறா அதன் மேல் இறங்கித் தங்கினது. இவை இரண்டும் அங்கே ஒன்று பட்டன. ஞானஸ்நானத்துக்குப் பிறகு பரிசுத்த ஆவி அடையாளம். இந்த ஒரு வழியில் தான் புறாவானது ஆட்டுக்குட்டியின் மீது இறங்கும். புறா கிறிஸ்துவின் மீது இறங்கித் தங்கினதைக் கண்ட யோவான் இயேசுவைப் பார்த்து, "இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி'' என்றான் (யோவான் 1:29). பின்னும் யோவான் சாட்சியாக : 'ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்து இறங்கி, இவர் மேல் தங்கினதைக் கண்டேன்'' என்றான் (யோவான் 1:32). அல்லேலூயா. புறாவும் ஆட்டுக் குட்டியும் சேர்ந்தக் காட்சியைப் பாருங்கள்! அது தேவனும் மனிதனும் ஒன்றான காட்சி! பரலோகமும் பூலோகமும் கட்டித் தழுவின காட்சி! சகோதரனே, அது தேவன் ஆவியின் ரூபத்தி லிருந்து வந்து மனிதனாகி நம்முடன் வாசம்பண்ண கூடாரமடித்தக் காட்சி. முடிவற்றவைகளெல்லாம் கூடித்திகழ்ந்த காட்சி. யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது யேகோவா தேவனும் விழுந்து போன ஆதாமின் புத்திரரும் தேவ தூதரும் ஒன்றான காட்சி! மறக்க முடியாத சம்பவம். இப்பொழுது அவர்கள் ஓநாயின் மாதிரியாய் இருந்திருந் தால்? அழகாக கூவும் புறாவானது ஓநாயின் மேல் நின்றிருக்காது. 34. அழகான புறா வந்து "சாயங்காலத்திலே" கூவும் (சகரி.14:7) இந்த காட்சியைவிட வெறென்ன இன்பமான காட்சியுண்டு! என் மனைவியும் குழந்தைகளும் மரித்த பிறகு நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை யாருக்கும் அறிவிக்கவில்லை. காரில் உட்கார்ந்து கல்லறைக்குப் போய் சவக்குழியைப் பார்த்துக் கொண்டே இருப்பது என் வழக்கமாயிருந்தது. அவர்களை மறக்க முடியாதிருந்தேன். என்னுடைய எட்டுமாத குழந்தையை அங்கே அடக்கம் பண்ணியிருந்தேன். தாங்கமுடியாமலிருந்தேன். குழந்தைக்குத் தாதை ஊதினால் அதுக்கூ.. க்கூ.. என்று சிரித்து தன் சின்னஞ்சிறு கைகளை என்பக்கம் நீட்டும். சாயங்காலத்தில் மரத்தின் கீழ் உட்கார்ந்து, புறா கிளையின் மேல் உட்கார்ந்து கூவுவதைக் கேட்டு, என் குழந்தையின் ஆத்துமா இந்த புறாவின் மூலம் என்னுடன் பேச வந்திருக்குமோ என்னவோ என்று ஏங்குவது வழக்கம். புறாவின் கூவுதலைவிட எனக்கு வேறெந்த சத்தமும் இனிமையாக இல்லை. புறா நேசிக்கிறது. அது செய்தி கொண்டு வரும் பறவை. அது சமாதானத்தின் சின்னம். காலையில் எழுந்திருந்து என் வீட்டுக்கு அருகிலுள்ள சிறுக்காட்டுக்குள் சென்று அங்கே புறாக்கள் உயரமான மரங்களிலிருந்தும் ஒன்றொடொன்று கூவிப் பேசுவதைக் கேட்பது எவ்வளவு சாந்தியாக இருக்கிறது! 35. முந்தின நாள் சகோ. கோக்ஸ் வீட்டுக்கு நான் சென்றிருந்த போது, ஒரு தாய் புறா தன் இரண்டு குஞ்சுகளையும் பூனைக்கு எட்டாதபடி வீட்டின் மேல் வைத்து இரை கொடுப்பதைக் கண்டேன். பின்னர் குஞ்சுகளை மரக்கிளை மேல் உட்கார வைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டு நாளெல்லாம் கொஞ்சுவதைக் கண்டேன். இரண்டு சிறு சாதுவான புறாக் குஞ்சுகள். 36. தேவன் எவ்வளவு ஆச்சரியமாகத் தம்மை நேசிக்கும் புறாவாகக்காட்டி மனுக்குலத்தில் அன்பு கூர்ந்தார்! தேவன் நேசிக்கப்பட ஆசிக்கிறார். உன்னையும் அவர் நேசிக்கிறார். "தேவன் தம்முடைய ஓரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.'' கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! தேவன் நேசிக்க ஆசித்ததாலே, நேசிக்கத் தம்மைப் போலவே ஒன்றை சிருஷ்டிக்க வேண்டியதாயிற்று: தமது குணாதிசயம் போலவே ஒன்றை சிருஷ்டித்தார் - அது ஆட்டுக்குட்டி. குணத்தில் உன்னைப்போலவே இல்லாதவருடன் நீ கலந்து பழக விரும்பமாட்டாய். நேசிப்பது எப்பொழுதும் நேசத்தோடு சேர்ந்திருக்கும். 37. குடும்ப வாழ்க்கை வளர புருஷனும் மனைவியும் ஒருவரை யொருவர் நேசித்தல் அவசியம். மணவாளன் மணவாட்டியையும், மணவாட்டி மணவாளனையும் தான் நேசிக்கத்தக்கவாறு தேடி எடுக்கிறீர்கள். 38. அவ்வண்ணமே தேவனும் தாம் நேசிக்கத் தகுதியான ஆத்துமா வைத் தேடி கண்டுபிடிக்கிறார். எனவே அவர் தம்மை வெளிப்படுத்த ஒரு சாந்தமான புறாவையும்' ஒரு சாதுவான செம்மறியாட்டுக் குட்டியையும் மாதிரியாகக் கொண்டார். அந்த ஆட்டுக்குட்டி ஒரு நிமிடத்துக்காவது தனது சுபாவத்தை ஓநாயைப் போல மாற்றியிருந்தால், புறா உடனே பறந்தோடிப் போயிருக்கும்! 39. ஆனால் ஆட்டுக்குட்டி சொந்த புத்தியுடையதல்ல. ஆட்டுக்குட்டி காணாமற்போனால், கண்டுபிடிப்பது அரிது. அது தானாகவே வழியைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனாலேதான் வெள்ளாடு அதை அழிவுக்கு நடத்தி விடுகிறது. அது தன் வழியை அறியாது. ஆகவே அது காணாமற்போகிறது. அக்காரணத்தைக் கொண்டுதான் தேவன் நம்மை ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக்கினார். நாம் உலகத்தில் காணாமற்போனால் திரும்பி வருவதில்லை. வழி தவறினால் நாம் வழியைக் கண்டு கொள்வதில்லை. எனவே, நாம் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே: நாம் நம்மை நமது மேய்ப்பருக்கு ஒப்படைத்து அவர் மந்தையில் நடத்தப்பட வேண்டும். 40. புறாவும் ஆட்டுக்குட்டியும் ஒன்றானதைப் பார்த்தோம் புறா ஆட்டுக்குட்டியாகிய தேவனுடைய குமாரனை நடத்தினது. தன்னையே பலிகொடுக்க வேண்டுமென்று ஆட்டுக்குட்டி அறிந்திருந்தது. அது மௌனமாக இருந்தது. ஆட்டுக்குட்டியான இயேசு தாமாகவே ஒன்றும் செய்யவில்லை. அவர் கூறினதைக் கவனி ... நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன். பிதா என்னிலே இருக்கிறார்.'' 41. ஆட்டுக்குட்டி வேறொரு காரியம் செய்கிறது: தன் உரிமையை முழுவதுமாகப் புறாவினிடம் ஒப்படைக்கிறது. தேவன் நம்மை ஆட்டுக்குட்டிகளைப் போல ஆக வேண்டுமென்கிறார். பல சமயம் நாம் நம்முடைய உரிமைகளை ஒப்படைக்க மறுக்கிறோம். உரிமைகளைத் தியாகம் செய்ய மறுக்கிறோம். உங்களில் பலர், ''சகோ. பிரான்ஹாமே, உரிமை எங்களுக்குரியதல்லவா?'' என்று என்னைக் கேட்கலாம். அது உண்மை! ஆனால், நீ உன் உரிமைகளைத் தியாகம் செய்ய மனதாயிருக்கிறாயா? தேவன் உன்னை நடத்த நீ உன் உரிமைகளை இழக்க மனதாயிருக்கிறாயா? இன்றைய சபைகள் இப்படி இருப்பதற்கு இதுவே காரணம். உரிமைகளை இழக்க அவர்களுக்கு மனமில்லை. நாம் ஆட்டுக்குட்டியைப் போல் இருக்க வேண்டியவர்கள். ஆனால், நாம் மிருகங்களானோம்! ஆட்டுக் குட்டிகளாகவில்லை. அதுதான் காரணம், நாம் மிருகம் போல முரட்டுத் தனம் பண்ணினால், புருவாகிய பரிசுத்த ஆவி பறந்துவிடுகிறது. 42. தேவ ஆட்டுகுட்டியானவர் ஓநாயின் குணத்தைக் காட்டியிருந் தால், புறா பறந்தோடிப் போயிருக்கும். அவர் ஆட்டுக்குட்டியாகவே இருந்தார். புறா அவரிலே தங்கியிருந்தது. நாமும் ஆட்டுக்குட்டியாக மாறவேண்டும். இல்லையேல் புறா பறந்துவிடும். 43. பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தின் இருண்ட விசுவாசத்துக்குக் காரணம் இதுவே. சுபாவம் மாறிப்போனது. உரிமையைத் தேட ஆரம்பித்ததே காரணம். தமக்கு எது நல்லதென்று தெரிகிறதோ அதையே செய்ய ஆரம்பித்ததே காரணம். கர்வம் நம்மை ஆட் கொண்டது. நாம் வித்தியாசமான கிறிஸ்தவர்களானோம். எதிர்ப்பு நம்மில் குடிக்கொண்டுவிட்டது; தன்னயமுடையவர்களானோம். 44. ஆட்டுக்குட்டி வளர, வளர, அதன் சரீரத்தில் கம்பளி முடியும் வளர்கிறது. அதைத்தலை கீழாகத் தொங்கவிட்டு, அதன் உரோமத் தைக் கத்தரித்துக் கொள்கிறார்கள். அது உதைப்பதுமில்லை, முணு முணுப்பதுமில்லை. அதன் உரிமையைக் கத்தரித்துக் கொள்கிறார் கள். அது மௌனமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அது ஆட்டுக்குட்டி. மௌனமாக இருக்கிறது. அது அதன் சுபாவம். ஒரு தடவை ஒரு கிறிஸ்தவனின் பாதையைக் கடந்து பார். அப்போது அவன் செம்மறியாட்டுக்குட்டியா அல்லது வெள்ளாட்டுக் குட்டியா என்பது உடனே தெரிந்துவிடும். ஒரே தடவை அவனை கடந்து செல் : அவன் யார் என்பதை அறிந்து கொள்வாய். இன்றைய சபையின் கனி சாரமற்றுப் போனதற்கு காரணமே இதுதான். 45. நாம் நம்மை "தேவ ஆட்டுக்குட்டிகள்'' என்று அழைத்துக் கொள்கிறோம். ஆணும் பெண்ணும் இன்று மிருகங்களானோம் தேவ ஆட்டுக்குட்டிகளாய் மாறவில்லை. சபையாரைப் பாருங்கள்! கத்தரித்து சுருள் - சுருள்களாக்கின முடி, அரை நிர்வாண உடை. ஆண்கள், பெண்கள் வைத்திருக்கும் முடி போன்று வைத்திருத்தல் முதலியவைகளைப் பாருங்கள், சில வருடங்களுக்கு முன்பு சபை அங்கத்தினர் இப்படியாயிருந்தனர்? இன்றைய சபையின் நிலையைப் பார்த்து மனந்திரும்பு . நீ தாழ்மையையும் சமாதான மான வாழ்வையும் விட்டு ஓநாயின் குணத்தைக் கற்றதுதான் காரணம். வெள்ளாட்டின் குணத்தைக் கற்றதுதான் காரணம். ''சகோதரன் பிரான்ஹாமே, அது என் சலுகை, உரிமை'' என் கிறாயா? அது உன் உரிமை என்பது எனக்குத் தெரியும். அது ஜன நாயகத்தின் சலுகை, விதவிதமாக முடி வெட்டுவதும் அம்பட்ட னின் சலுகை, சுதந்திரம். ஆனால் நீ ஆட்டுக்குட்டியாய் மாற பிரியப்பட்டால், அந்த சலுகைகளையும், உரிமைகளையும், சுதந்திரங்களையும் விட்டுவிடுவாயா என்பது தான் கேள்வி. உன்னை முழுவதுமாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பாயா? 46. பெண்களே, நீங்கள் சில வருடங்களுக்குமுன் நன்றாகத்தான் உடுத்தினீர்கள். இன்று சிரிப்புக்கு ஏதுவாக ஏன் உடுத்துகிறீர்கள்? நான் மற்ற சபைகளைக் கேட்கவில்லை. பரிசுத்த ஆவியில் விசுவாசிக்கும் உங்களைக் கேட்கிறேன். 47. ஒருநாள் என் காரின் முன்பக்கம் ஒரு சிலுவையைத் தொங்க விட்டு இருந்தேன். அதைக் கண்ட ஒருவர், "பிரான்ஹாமே அது ஒரு கத்தோலிக்கச் சின்னமாச்சே, உனக்குத் தெரியாதா?" என்று என்னைக் கேட்டார். 48. அதற்கு நான், ''சிலுவை கத்தோலிக்கருக்கு மாத்திரம் சொந்தமானது என்றையிலிருந்து?" என்றேன். சிலுவை கிறிஸ்தவ விசுவாசத்தின் சின்னம் ''மரித்த பரிசுத்தவான்கள்'' தான் கத்தோலிக்கரின் சின்னம். ஏனென்றால், மரியாள் மற்றும் வேறு உயிரற்றவர்கள் மூலம் அவர்கள் இரட்சிப்புத் தேடுகிறார்கள். நாங்கள் செத்துப்போன பரி. சிஸிலியாவை வணங்குவதில்லை. மரித்தவர்கள் வழியாய் ஜீவனைத் தேடுவது கத்தோலிக்க மார்க்கம், அது அவர்களுடைய உரிமை. ஆனால் சிலுவை, இயேசு நமக்காக மரித்ததைக் குறிக்கிறது. ஆக, "சிலுவையை என் கார்முன் தொங்க விடுவேன்'' என்றேன். 49. இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் முழு குருடனாக இருந்தபோது, கர்த்தர் என் கண்களைத் திரும்ப சுகமாக்கினால் அவருக்குப் பிரியமானவைகளையே பார்ப்பேன் என்று வாக்களித்திருந்தேன். பாதி நிர்வாணமாக உடுத்தி வீதிகளில் நடக்கும் பெண்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களல்லவா? கிறிஸ்து எனக்குச் செய்த நன்மைகளை உணர்ந்து அவர் சிலுவையை நோக்க ஆசித்தேன். பிசாசின் நாகரீகங்களைப் பார்க்காமல் என் முகத்தை மறைத்தேன். அல்லேலூயா. 50. இன்றைய சபை இப்படிக் கூறுவதில்லை, பெந்தெகொஸ்தே சபையார் இப்படி ஒரு காலத்தில் கூறினார்கள். ஆமென்! ஆனால் இன்று, "எனக்கு உரிமையும் சுதந்திரமும் உண்டு" என்கிறார்கள். அது சரி, நீ ஆட்டுக்குட்டியாக இருந்தால், உன்னுடைய சுதந்திரங்களையும், உரிமைகளையும் விட்டு விடுவாய். நீ முரண்பாடு செய்தால், பரிசுத்த ஆவி - அந்த சாந்தமான புறா - உன்னை விட்டு பறந்தோடிவிடும். அது உன்னுடன் சேர்ந்து தன்மானத்தைப் போக்கிக்கொள்ளாது. இல்லை! முரட்டாட்டத்துடன் பரிசுத்த ஆவியைப் பெற நினைக்காதே! அப்படி நடக்காது. வேதாகமம் அப்படிச் சொல்லுகிறது. நீ உன் உரிமைகளைத் தியாகம் செய்ய வேண்டும். 51. "மற்ற பெண்கள் அப்படிச் செய்கிறார்களே'' என்கிறாயா மனிதர்களே, உங்கள் மனைவிகளை அரை - நிர்வாணமாக உடுத்திக் கொள்ள அனுமதிக்கிறீர்களே, அது நீங்கள் எதனால் ஆக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. அதனாலே தான் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றதாகக் கூறி உங்கள் மனைவிகள் அப்படி உடுத்த அனுமதித்தால், நீங்கள் யார்? நான் பேசுவது பழைய சரக்காகத்தான் தோன்றும். இன்றைய சபைக்கு வேண்டியது இந்தப் பழைய சரக்கே! பழையதான பரிசுத்த ஆவியே உன்னைக் கழுவ முடியும். உன்னை உலர வைக்கக் கூடும். காயவைத்து இஸ்திரி போட்டு - உன்னை உடுத்துவிக்கும், இது சத்தியம்! 52. உலகம் எந்த நிலையை அடைந்துவிட்டது! வீதிகளிலே அவர்கள் செய்யும் அட்டகாசமும் அக்கிரமும், புதன்கிழமை இரவு சபைக்குச் செல்லாமல் தொலைகாட்சிப் பெட்டியில் (T.V) உன் தலையை ஒட்ட வைத்துக்கொள்கிறாய். டேவிட் குரேகெட் (David Crockett) என்ற நடிகரை அறியாத சிறுவர் இல்லை. அவன் மூன்று வயதில் ஒரு கரடியைக் கொன்றான் என்று கூறுகின்றனர். அது சுத்த பொய், ஆனால் உன் குழந்தைகளுக்கு அதைச் சொல்லிக் கொடுக்கின்றாய். சிறு குழந்தைகளும் திரைப்பட நடிகர்கள் யாரென்று அறிகிறார்கள். இன்னினவர் இந்தப் படத்திலும் நடித்தார் என்பதுதான் பேச்சு, ஆனால் அவர்களுக்காக பலியான இயேசு கிறிஸ்து அவர்களுக்குத் தெரியாது! உலகம் பாவத்தால் அதிகமாய் கறைப்பட்டதே இந்த நிலைக்குக் காரணம். தேவனை விட்டுவிட்டதே காரணம். இந்தச் சபைகள் பரிசுத்த ஆவியை விட்டதே காரணம். 53. "நான் சபைக்குச் சென்று கத்திக் கத்திப் பாடி ஜெபிக்கிறேன்" என்கிறாயா? நீ அப்படிச் செய்யலாம், சாதுவான தேவ ஆட்டுக் குட்டி உன் மனதில் வந்துத் தங்கி உன்னைச் சீர்ப்படுத்தினாலொழிய, கிறிஸ்தவனைப் போல நீ நடிக்கும் நடிப்பு உனக்கு ஒரு நன்மையும் தராது. ஆமென்! 54. ஒரு நோயாளியைப் பார்க்க ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த வீட்டில் ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மகன் வீட்டுக்கு வந்ததும், சாப்பாடு தயாரா என்று கேட்டான். 55. அதற்கு அவள், "மகனே, இன்று சமயம் கிடைக்கவில்லை சாப்பாடுச் செய்யக்கூடவில்லை. நான் உனக்குச் சிற்றுண்டி தயார் செய்கிறேன். சாத்துக்குடி பழம் இருக்கிறது. சாப்பிடு" என்றாள். 56. அவன் சாத்துக்குடி பழம் இருக்குமிடத்துக்குச் சென்று, ஒரு பழத்தை எடுத்து, அதை உற்றுப்பார்த்து, நறுக்கென்று ஒரு கடி கடித்து, இழுத்து ஒரு சுவற்றின் மேல் அடித்தான். "இந்த வீட்டை இப்படித்தான் நடத்த முடியும் என்ற முடிவிலிருந்தால் நான் எங்கேயாவது போய்விடுவேன்'' என்று குரைத்தான். 57. தேவனே, ஐந்து நிமிடங்களுக்கு இவன் என் மகனாயிருக்க வேண்டும். இவன் தோலை உரித்துவிட்டிருப்பேன். பழங்காலத் தோல் உரிப்புதான் இவனுக்கு வேண்டியது. இன்று நமக்குப் பழங் காலத்து வீடுகள் வேண்டும். பிரசங்கிகள் பகிரங்கமாக பிரசங்க பீடத்தில் நின்று சத்தியத்தைக் குறித்துப் பேசி திருத்தவேண்டும். ஆமென்! இன்றைக்கு வேண்டியது திருத்துதலே. உண்மை. 58. சின்னசிறு, பெண்கள் அரை நிர்வாணமாக உடுத்தி, உதடுகளுக்கு வர்ணம் பூசி, தலையையும் மார்பையும் செருக்கோடு உயர்த்தி, அடங்காப்பிடாரிகளாக வீட்டை விட்டு வெளியே போகிறார்களே - என்ன சீர்கேடு! கொஞ்சமும் அடங்காதப் பிள்ளைகள்! இப்படித்தான் கடைசி காலப் பிள்ளைகள் இருப்பார்களென்று வேதாகமம் கூறுகின்றது. அவர்கள் எப்படி நடப்பார்கள் என்றும், எப்படி வாழ்வார்கள் என்றும், வேதம் கூறுகின்றது. இன்றைய உலகம் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தினதே இந்நிலைக்குக் காரணம். 59. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் லாஸ் ஏஞ்சலிஸ் என்னும் அமெரிக்க நகரத்திலே, அஸுஸா என்னும் வீதியில் ஒரு பெந்தெ கொஸ்தே சபைக்கூட்டம் நடக்கையில் பரிசுத்த ஆவி ஜனங்கள் மேல் ஊற்றப்பட்டது. அந்த நாளை முன்னிட்டு தேவனை நன்றி யோடு துதித்துப் பாட நானும் போகப்போகிறேன். அந்நாளிலே கிறிஸ்து ஜனங்கள் நடுவில் வந்தபோது, அவர்கள் தாழ்மையாகவும் சாந்தமாகவும் தேவனுக்கேற்ற வாழ்வை நடத்தின வர்களாயும் கீழ்ப்படிகிறவர்களாகவும், பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட விரும்புகிறவர்களாகவும், "பழைய சரக்கு'' என்றும் பரிசுத்தவான்களைப் பைத்தியக்காரர்'' என்றும் சொல்லிக் கேலி செய்கிறவர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்களாகவும் இருந்தார் கள். பரிசுத்த ஆவியின் நடத்துதலை விரும்புகிறவர்களாக அவர்கள் இருந்தார்கள். 60. ஆனால் இன்று... அடே... அப்பா... இன்று ஜனங்கள் பவுடர் பூசி அலங்கரித்துக்கொண்டு, மேக்கப் பெட்டியை கையிலேந்தி குட்டைக்கால் சட்டையுடன் வீதிகளில் நடப்பதை பார்! எவ்வளவு கேவலம்! இந்தக் கதியிலிருந்தும், "நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளோம்' என்கிறார்கள். "ஓ.... நாங்கள் அந்நிய பாஷைப் பேசுகிறோம்'' என்கிறீர்களா? ஆமாம். பிசாசுகூடப் பல பாஷைகளில் பேசுகிறது! "... ஓ நாங்கள் சத்தமிட்டு ஜெபிக்கிறோம் என்கிறீர்களா? பிசாசுகூட சத்தமிட்டு ஜெபித்து பாவனை செய்கிறான். அன்பைத் தவிர மற்றெல்லாவற்றையும் பிசாசு பாவனை செய்ய வல்லவனாயிருக்கிறான். தேவ அன்பை அவனால் பாவனை செய்ய முடிவதில்லை . 61. சாதுவான புறா, பரிசுத்த ஆவி, தேவனுடைய புறா சொல்லும் வார்த்தைகளை விட்டு பின்புறளி பேசும் பிசாசின் வார்த்தையைக் கேட்டு மதி கேடர்கள், ''இந்த சபை போதகர் இப்படிச் சொன்னார்" அந்தப் மூப்பர் அப்படிச் சொன்னார்.'' என்று நீ அதனைப் பிரசங்கம் செய்வதே இதற் கெல்லாம் காரணம். பரிசுத்த ஆவியின் சத்தத்தை நீ கேட்டால், அவர் உன்னை நீதியில் நடத்துவார், உன்னை நேசிப்பார், உன்னை ஆசீர்வதிப்பார். 62. முதலாவது உன்னில் அந்தக் கோபவலிப்பு இருக்குமானால், பரிசுத்த ஆவி பறந்துப்போகிறது. அவர் உன் கோபத்தைத் தாங்குவதில்லை. அவருடைய சுபாவம் வேறு நீ உன் அயலானுக்கு விரோதமாய் பேசினால், பரிசுத்த ஆவி உன்னிலே தங்குவதில்லை. நீ ஆட்டுக்குட்டியானாலொழிய புறா உன்னிலே தங்காது. 63. உன் கெட்ட சுபாவத்தைக் தேவனால் மாற்ற முடியும், நீ ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உன்னை அவர் மாற்றமுடியும். "சகோ. பிரான்ஹாமே, இதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?'' என்றா கேட்கிறாய்? நீ மறுபடியும் ஆட்டுக்குட்டியாய் மாறவேண்டும். இந்த இரண்டு பிராணிகள் மாத்திரம் ஒன்று சேர்ந்து இருக்கமுடியும் - புறாவும் ஆட்டுக் குட்டியும். புறா ஆட்டுக்குட்டியுடன் தங்கும். வேறெந்த மிருகத்துடனும் தங்காது. நீ வெள்ளாடாக மாறியிருந்தால், அந்த வெள்ளாட்டின் ஆவியை" உன்னிலிருந்து துரத்திவிடு. அப்படிச் செய்வதுதான் சரி. எல்லாவித மிருகங்களையும் விட்டு விலகு. அர்த்தமில்லாமல் பேசுபவனாயிருக்காதே. 64. ஒரு பட்டணத்திலே ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடியிருந் தார்கள். அங்கே என்னால் கூடிய மட்டும் போதித்தேன். மனிதன் செய்யும் எல்லா பாவங்களையும் குறித்துப் பேசினேன். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களைப் பீடத்துக்கும் அழைத்தேன். பலர் வந்தார்கள். பிரசங்கத்துக்குப் பிறகு, அன்றிரவு ஒரு ஸ்திரீ என்னிடம் வந்து சகோ. பிரான்ஹாமே, இன்றிரவு நீர் உமது பிரசங்கத்தில் என்னைப் பற்றிப் பேசவில்லை" என்றாள். அவளை உண்மையான கிறிஸ்தவள் என்று நினைத்தேன் அவள் மீண்டும், "நீர் என்னைப் பற்றி பேசவில்லை" என்றாள். 65. "நல்லது. நான் அதைப்பற்றி சந்தோஷப்படுகிறேன் அம்மா. நீ ஒருவேளை தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு அருகில் இருக்கிறாய்'' என்றேன். அவள் சரசரவென்று போய்விட்டாள். 66. ''அவளை உனக்குத் தெரியுமா?" என்று அருகில் நின்று கொண்டிருந்த ஒரு சின்ன சகோதரியைப் கேட்டேன். "ஆமாம்" என்றாள் அவள் '' அவள் ஒரு நல்ல கிறிஸ்தவளாக இருக்கவேண்டும்" என்றேன். 67. ஆனால் அந்த சின்ன ஸ்திரீ, "ஒன்றை மாத்திரம் இன்றிரவு நீர் உமது பிரசங்கத்தில் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர், சகோதரனே... வீண் பேச்சு.... அரட்டையடித்தல் ....அவள் இந்த தேசத்திலே வீண்பேச்சு பேசுகிறவர்களில் முதலாம் நம்பர்' என்றாள். 68. இதைக் கேட்டீர்களா? பிரசங்கி ஒருவன் இத்தகைய காரியத்தைக் குறித்துப் பேசினாலும் பேசாவிட்டாலும், நீ உலக போக்கைக் கண்டால், அதிலே பங்கெடுக்காதே, பங்கெடுப்பாயானால், அதைப் பொறுத்துக் கொள்வாயானால், நீ தேவனுக்குத் தூரமானவன், பரிசுத்த ஆவி உன்னிலிருக்காது. வீண்பேச்சுகாரரை சபைகளில் பொறுத்துக்கொள்வதனால்தான் இன்று கூட்டங்கள் முன் இருந்தபடி இருப்பதில்லை. அதனாலேதான் இன்று ஆன்மிகக் கூட்டங்கள் இந்த தேசத்தில் சரிவர நடைபெறுவதில்லை. தேவனுடைய சாந்தமான புறாவை நாம் நமது அரட்டைத்தனத்தால் துக்கப்படுத்தினோம். நாம் நம் சொந்த வழியிலே நடந்தோமானால், நம்மில் மிருக புத்தி இருக்குமானால், பரிசுத்த ஆவி வராது. புறா பறந்தோடிப் போயிருக்கும். 69. ஆட்டுக்குட்டி மௌனமான மிருகம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். ''அவர் தம் வாயைத் திறக்கவில்லை'' என்று வேதாகமம் கூறுகிறது."... மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்" (ஏசா.53:7). அவர் தம் வாயைத் திறக்கவில்லை. அந்த ஆட்டுக்குட்டி தன்னுடைய உரிமையை கொண்டாடவில்லை. அது தனது உரிமைகளைத் தியாகஞ்செய்தது. அது மௌனமான ஆட்டுக்குட்டி. 70. இன்று.... அடே அப்பா... சபைகளிலே எத்தனை வித்தியாசங்கள்! இவ்விதமான சம்பாஷணைகள்தான் இன்றைய சபைகளிலே காணப்படுகின்றன: 'நான் உனக்குச் சொல்லுகிறேன், யாராவது என்னைப் பற்றி ஏதாவது சொல்லட்டும், சும்மாவிடுகிறேனா பார்! அவனைச் சபையிலிருந்துத் தள்ளி அவன் பெயரைக் கெடுத்து விடுவேன். பார்? அவளா? அந்த வேஷக்காரியா? அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். ஸ்தோத்திரம்! அல்லேலூயா! ம்... ம்?" புறா பறந்துவிடுகிறது. ஆமாம! எதுவரை நீ இப்படிச் செய்துக் கொண்டே இருப்பாயோ அதுவரை பரிசுத்த ஆவி உன்னில் தங்கு வதில்லை! உன் புத்தகத்தில் இதைக் குறித்துக்கொள்'' பரிசுத்த ஆவி தங்காது. நீ சாதுவாகவும், ஆட்டுக்குட்டிக்கு உள்ள தன்மையோ அல்லது மிருதுவான தன்மை இருந்தாலொழிய பரிசுத்த ஆவி உன்னைப் பார்க்கவே பார்க்காது! நீ வழி தவறி அசுத்த ஆவியுடன் சம்பந்தப்பட்டாய். அச்சணமே பரிசுத்த ஆவி உன்னை விட்டு விடுகிறது. 71. ஒரு நிமிடம் தேவனைவிட்டு பிரிந்ததால்தான் முதன் முதல் மனுஷியால் பாவம் செய்யப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா? ஏவாள் தேவ வார்த்தையைவிட்டு சாத்தானிடம் பேசினதால்தான். அவன் அவளை மயக்கிப்பேசி பாவத்துக்குள்ளாக்கினான் அவன் ஒரு நிமிடத்திலே அவளுடைய மனதைக் கவர்ந்து பேசினான். அது அவளுக்குச் சத்தியமாகத் தோன்றிற்று. அதை அவள் கேட்டாள். அவ்வளவுதான். 72. நீ சில நிமிடத்துக்குத் தேவனைவிட்டுப் பிரிந்திருக்கவேண்டும் என்பதே சாத்தானுடைய சூழ்ச்சி. அந்த நிமிடத்துக்குள் அவன் ஒரு அழகான கதையைக்கட்டி, "இங்கே பார்! உனக்குப் பலான சகோதரன் தெரியுமா? பலான சகோதரி தெரியுமா? அவர்கள் நல்லவர்களானால் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள். அதை அப்படிச் செய்திருந்தால் இது இப்படி ஆயிருக்குமா?'' என்பான். அவன் கூறுவது உண்மையாகத் தோன்றும்படி அவன் எதையும் செய்வான். விளங்குகிறதா? ஆனால் அவன் பிசாசு என்பது ஞாபக மிருக்கட்டும்! 73. மனிதர் எவ்வளவுதான் கீழ்த்தரமானவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. அவர்கள் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் சரி, அவர்களைக் கட்டி அணைத்து அவர்களுக்குத் தேவ அன்பைக் கொண்டு வருவதுதான் நீ செய்யவேண்டியக் காரியம். தேவனுடைய அன்பு உன்னை சாக்கடையிலிருந்து எடுத்தபோது நீ "என்ன செய்துக் கொண்டிருந்தாய்?'' நீ பாவிகளை அன்பினால் திருத்தலாம். உலகம் இப்பேர்ப்பட்ட அன்புக்காகச் சாகிறது. நீ செய்ய வேண்டிய காரியம். என் சிநேகிதனே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதே. 74. நீ இந்த மிருகத்தைப் பார், சின்ன மிருகம். மௌனமான ஆட்டுக்குட்டி அமைதியாக இருக்கிறது. ''அவர் வையப்படும் போது, பதில் வையவில்லை" அவர் தமது வாயைத் திறக்கவில்லை என்னையும் உன்னையும் நிந்திக்கட்டும், போராடட்டும், தவளையைப் போல் தாவி குதிக்கட்டும். பெருந்தவளையைப் போல எகிரி குதிக்கட்டும். 75. இன்றைய சபை பேச்சுக்கள்: "ம்... உனக்கு இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். அந்த பிரசங்கி என்னை எப்படி அவமானப் படுத்தினான் தெரியுமா? அவனுடைய சபைக்கு இனிமேல் போகவே மாட்டேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! பல சபைகள் என்னை அழைக்கின்றன. அவைகள் என்னைச் சேர்த்துக்கொள்ளும். அல்லேலூயா! மறுபடியும் அவன் வார்த்தையைக் கேட்க அங்கே போகவேமாட்டேன்.'' நிரம்ப நல்ல பேச்சுக்கள். ஆனால் புறா பறந்துவிடுகிறது. 76. இன்னும் சில சபைகளில் பேச்சு; "என்னவென்று உனக்குத் தெரியுமா? பலான வேஷக்காரன், பலான மாயக்காரன் மறுபடியும் நமது சபைக்கு வந்தால், நான் வரமாட்டேன். அல்லேலூயா! நான் வரவேமாட்டேன்'' என்கிறார்கள். ஓநாயைப் போல குரைக்கும் அந்த ஆவி சபையில் இருக்குமானால், பரிசுத்த ஆவியாகிய புறா பறந்து விடுகிறது! பரிசுத்த ஆவி போய்விட்ட பிறகுதான் உன் நிலையை நீ அறிகிறாய். 77. சபை இப்படி ஏன் மாறிவிட்டது என்று நீ ஆச்சரியப் படுகிறாய். பாவத்தின் மேல் ஜெயம் எங்கே? நீ முன்பு ஜெயித்தது போல இப்பொழுது ஏன் (உலகத்தை) ஜெயிக்க முடிவதில்லை? உன் சுபாவத்தை மாற்றிக்கொண்டாய். நீ ஒரு செம்மறியாட்டுக் குட்டியாக மாறுவதற்குப் பதிலாக வெள்ளாட்டுக்குட்டியாக மாறினாய். வேறொரு மாதிரியான மிருகமானாய். 78. "பரிசுத்த ஆவி என்னை எங்கு வேண்டுமானாலும் நடத் தட்டும்;' என்று கூறும் தாழ்மையான ஆவி உன்னில் வேண்டும். "தேவனே எப்பேர்பட்ட பாவி எந்த நிலையிலிருந்தாலும் நான் அவனை நேசிப்பேன் என்று நீ வேண்டுதல் செய்து மனந்திரும்பினால், புறா வந்து தங்கும். 79. "இதற்கு என்ன செய்வது, சகோதரன் பிரான்ஹாமே?'' என்கிறாயா? ஆம், நீ ஆட்டுக்குட்டியாக மாறவேண்டும். நீ செய்ய வேண்டியது இதுதான். 80. முந்தின நாள் இரவு ஷிரீவ்போர்டு நகரத்திலே நானும் என் மகன் பவுலும் பிரசங்கத்துக்குப் பிறகு சிற்றுண்டிக்காக ஒரு ஒட்டலுக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு வாலிபப் பெண்ணைக் கண்டோம். அழகான பெண் வயது 20 இருக்கும். அழகாக உடுத்தி உட்கார்ந்துக்கொண்டிருந்தாள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். அப்பொழுது அந்த அழகான வாலிபப் பெண் "இன்று நீர் பிரசங்கம் செய்தது நன்றாயிருந்தது" என்றாள். 81. 'மிக்க நன்றி, சகோதரியே, நீ சௌக்கியமா? நீங்கள் 'லைப் கூடாரம்' சபையைச் சேர்ந்தவர்களல்லவா?'' என்றேன். 82. ''ஆம்'' என்றாள். ''நான் பாடகக் குழுவினருடன் (Choir) சேர்ந்து பாடியிருப்பேன். ஆனால் என்னைப் பாடவிடவில்லை. பல வருடங்களாக நான் நன்றாகப் பயின்று பல ராகங்களைப் பாடத் திறமை வாய்ந்தவள்'' "உதட்டின் மீது வர்ணம் பூசினவர்கள் பாடகர் குழுவினருடன் சேர்ந்து (சபையில்) பாடக்கூடாது என்று தடை செய்தார்கள், நான் பாடவில்லை'' என்றாள் அவள். "லைப் கூடாரம் சபைக்காக தேவனைத் துதிக்கின்றேன்'' என்றேன். 83. ''நானும் கிறிஸ்தவளாச்சே, சகோ. பிரான்ஹாமே'' என்றாள். 84. ''சகோதரியே, நீ வீட்டுக்குச் சென்று உன் முகத்தைக் கழுவு.'' "நீ வர்ணங்களை முகத்தில் பூசிக்கொண்டு இருக்கும் இந்த அசுத்தத்தை சபையிலே அனுமதிக்க உத்தரவா கேட்கிறாய்?'' என்று அதட்டி அனுப்பிவிட்டேன். 85. இத்தகைய காரியங்கள் பிசாசினிடமிருந்து வருகின்றன என்று நான் உங்கள் முன் நிரூபிக்க முடியும். இது அஞ்ஞானிகளிடத்திலிருந்து தான் ஆரம்பித்தது. நீ உன்னை வர்ணங்களால் அலங்கரித்தால், நீ ஒரு அஞ்ஞானி! அது அஞ்ஞானியின் அடையாளம். ஆபரணங்களெல்லாம் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்தன. கம்மலும், வர்ணங்களும், நகைகளும், நெக்லேஸும் ஹாட்டென்ட்டாட் காட்டிலிருந்து வந்தன. அவைகள் அஞ்ஞானிகளின் ஆபரணங்கள். கிறிஸ்தவர்கள் அஞ்ஞானிகளாயிருக்க வேண்டுமென்று வேதாகமம் கூறுவதில்லை, நான் உன்னை அஞ்ஞானி என்றும் சொல்ல வரவில்லை. அஞ்ஞானியைப்போல இருக்கிறாய் என்றுதான் கூறுகின்றேன். உன் சபை போதகர் உனக்குச் சத்தியத்தைச் சொல்லவில்லை. ஆனால் இப்படி வேதாகமம் கூறுகின்றது. 86. நீ ஒரு வேளை "சகோதரன் பிரான்ஹாமே, குட்டையான முடி புழுக்கத்துக்கு நல்லது அது குளிர்ச்சியாக இருக்கிறது'' என்று சொல்லலாம். அது சரி. உன் முடி நீளமாக இருந்தால் அதிக குளிர்ச்சியாக இருக்கும். உன் கழுத்தைச் சுற்றிக் குளிர்ச்சியாக இருக்கும். 87. வேதாகமம் கூறுவது என்னவென்றால், நீ உன் கூந்தலை வெட்டினால் உன் கணவன் உன்னை விவாகரத்து செய்ய உரிமை யுள்ளவனாக இருக்கிறான் என்கிறது. ஒருத்தி தன் கூந்தலை வெட்டினால், தன் கணவனுக்கு அவள் உண்மையுள்ளவளல்ல என்று வேதம் அப்படிக் கூறுகிறது (2கொரி 12). நான் கூறுவது தவறானால் இந்த வேதபாகத்தைப் படித்துத் தெரிந்து கொள். ஒரு ஸ்திரீ தன் கூந்தலை வெட்டினால் அவள் தன் தலையாகிய புருஷனை அவமதிக்கிறாள். அவள் தன் தலையை அவமதித்தால் அவளை ரத்து செய்து வெளியே அனுப்பிவிட வேண்டும். அதுதான் சரி, உன் சபை போதகர் இதைக் குறித்து உனக்குச் சொல்லவில்லை, அதனாலே தான் நீ இப்படி செய்கிறாய். வேதாகமம் கூறுகிறது..... 88. சில நாட்களுக்கு முன், ஒரு ஸ்திரீ எனக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியிருந்தாள்: ''சகோ, பிரான்ஹாமே, கிறிஸ்தவ ஸ்திரீகளாகிய நாங்கள் நைலானிலேயும் டேக்ரானிலேயும் சட்டை போட்டுக்கொண்டால் என்ன? போட்டுக் கொள்ளலாமல்லவா? 89. நான் இவ்வண்ணம் பதில் எழுதினேன்: "சகோதரியே, பார், நீ உன் மனதிலிருக்கிறதை நன்றாக அறிந்திருக்கிறாய். உன் செய்கையும் உன் நடத்தையும் உன்னில் என்ன இருக்கிறதென்றும் தெரிவிக்கிறேன். கற்புடன் உடுக்க உடை கடையில் விற்கவில்லையானால், நீ தேவையானதைத் தைத்து உடுத்துலாமல்லவா? தையல் மெஷின்களும் விற்கப்படுகின்றனவே, தைத்தும் கொடுக்கிறார் களே, உன் சரீரத்தை மூடிக்கொள்ள அடக்கமுள்ள ஆடையை உடுத்திக் கொள்ளலாமே, நீ அரை நிர்வாணமாக ஏன் உடுத்திக் கொள்ள வேண்டும்?" 90. பின்புறணி பேசுவது, உறுமுவது, முணுமுணுப்பது காரணமின்றி பழி சுமத்துவது - இவைகளே, சபை அழிவுக்குக் காரணம். இவைகளே சபையின் ஒற்றுமையை உடைத்துப் போடுகின்றன. இது, உன்னைவிட்டு பரிசுத்த ஆவி வெளியே போய் விட்டதையும், பிசாசு உள்ளே வந்ததையும் காட்டுகிறது. நான் இப்படிக் கூறுவது உங்களில் சிலரின் கோபத்தை மூட்டுகிறது. மூட்டத்தான் வேண்டும். நான் பேசுவதே உங்களுடைய கோபத்தை மூட்டத் தான். அலங்காரமான வார்த்தைகளில் நான் அழகாக பேச வரவில்லை. குற்றம் எங்கே இருக்கிறதோ அதை எடுத்துக் காட்டவேதான் நான் வந்தேன். உங்களைக் குறித்து தேவன் முன் நான் நின்று பதில் சொல்ல வேண்டும். நீ செய்யும் காரியங்கள் உன்னில் என்ன இருக்கிறது. என்பதை எடுத்துக் காட்டுகின்றன. நீ கோபப்பட்டுப் பலரை இழிவாகப் பேசுவதும் கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பதும், அவைகள் எங்கிருந்து வருகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. 91. இப்பொழுது நீ செய்ய வேண்டியது ஒன்றே. மிருக சுபாவத்தை வெளியே தள்ளு, அப்பொழுது புறா திரும்பி உன் இருதயத்துக்கு வரும். நோவாவின் பேழையிலிருந்து வெளியே சென்ற புறா திரும்பி வந்து கதவைத் தட்டினது (சகோ. பிரான்ஹாம் மேடையைத் தட்டுகிறார் - ஆசி). அப்பொழுது நோவா கதவைத் திறந்து புறாவை உள்ளே வரவிட்டான். பரிசுத்த ஆவி இங்கே இருக்கிறது. அது உன் உட்புறம் வர வாஞ்சிக்கிறது. பரிசுத்த ஆவி உங்களில் இல்லாமலிருப்பதற்கு நீங்களே காரணம்! அது உங்களை விட்டு ஒரேயடியாய் போய் விடவில்லை. வெளியே எங்கோ ஒரு மரக்கிளையின் மேல் உட்கார்ந்திருக்கிறது. திரும்பிப் பறந்து வரத்தயாராக இருக்கிறது. முன்போல உன்னில் அது குடியிருந்து உனக்கு அன்பையும் சமாதனத்தையும் சந்தோஷத்தையும் தரத் திரும்ப வரும். இது உண்மை. வரத் தயாராயிருக்கிறது. உன் சரீரத்தினுள் வர அது ஏங்குகிறது. ஆனால் நீ தான் அதை உள்ளே விட மறுக்கின்றாய்! 92. நான் அந்நியருடன் பேசிக்கொண்டிருக்கவில்லை. பிரான் ஹாம் கூடார சபையாருடன்தான் பேசுகிறேன். மற்ற சபையாருடன் பேசவில்லை. இந்த சபையுடன் பேசுகிறேன். இங்கே என்னதான் குற்றம் இருக்கிறதோ! 93. இதுதான் புறா பறந்தோடும்படி செய்கிறது. ஒருவரிலொருவர் குற்றங்கண்டுபிடிக்கிறீர்கள். சபை கலைந்து போகிறது. பிசாசின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து முரட்டாட்டம் ஆடுகிறீர்கள். ஆட்டுக்குட்டியின் சுபாவம்; இல்லாமற்போகிறது. அப்பொழுது பரிசுத்த ஆவி உங்களை விட்டுவிடுகிறது. இத்தகைய ஆவியை பரிசுத்த ஆவி தாங்க முடியாது. இன்று காரணமே இதுதான். ஜனங்கள் அசுத்த ஆவியை இருதயத்தினுள் வரவிட்டதுதான் சந்தோஷமின்மைக்கும் சமாதானமின்மைக்கும் காரணம். 94. நமது சபையில் சண்டை சச்சரவு, நோய் முதலியவைகளுக்குக் காரணம் இதுவே (1கொரி.11:30). நாம் சமாதானமாய் இருக்கவேண்டும். சாந்தமாக இருக்கவேண்டும். நாம் ஆட்டுக் குட்டிகளாயிருக்கவேண்டும். அப்பொழுது புறா நம்மில் குடியிருக்கும். 95. புறா திரும்பி வரும் என்பது ஞாபகமிருக்கட்டும். "சகோ பிரான்ஹாமே, நான் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை என்று சொல்லாதீர், அல்லேலூயா! ஓர் இரவு ஓ, அவர் என்னில் வந்ததும், என் நடத்தை நன்றாகத்தான் இருந்தது. (ஆம், அது அவர் தான்)... ஓ..... மரத்திலிருக்கும் அத்தனை பறவைகளையும் மார்பிலணைத்து நேசிக்க இருந்தேன். எப்பேர்ப்பட்ட பாவியானாலும், எனக்கு விரோதமாக என்னத்தான் செய்து இருந்தாலும், அவனைக் கட்டியணைத்து நேசித்தேன். ஓ, சகோ. பிரான்ஹாமே, அது உன்னதமான அனுபவமாயிருந்தது!'' 96. உண்மை. அது பரிசுத்த ஆவியேதான். அவர் உன்னில் நிலைத் திராததற்குக் காரணமென்னவென்றால், அப்பொழுது நீ ஆட்டுக் குட்டியாயிருந்தாய், ஆனால் இன்று நீ ஓநாயாக மாறியிருக்கிறாய். அதனாலேதான் பரிசுத்த ஆவி பறந்து போய்விட்டது. தவறு புறாவினுடையதல்ல; தவறு உன்னுடையது. நீ அசுத்த ஆவியை உள்ளே வரவிட்டாய் : "நான் உள்ளே வரவிட்டேன், சகோ. பிரான்ஹாம்? ஆம், நீ வழவழப்பான பேச்சைக் கேட்க போன போது, நீ பொய்யை நம்பின போது, நீ உன் உரிமைகளை நினைத்த போது, அசுத்த ஆவி உள்ளே வந்தது. 97. உனக்கு உரிமை ஒன்றுமில்லை! நீ கிரயம் கட்டி வாங்கப் பட்டிருக்கின்றாய்! அந்த கிரயம் விலைகொடுத்து வாங்க முடியாத தேவகுமாரனுடைய இரத்தமே. உனக்குச் சட்டபூர்வமான உரிமை இல்லை. அல்லேலூயா! உனக்கு இருக்கும் உரிமை என்னவென்றால், நீ "இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றில் மூழ்கி உன் பாவத்தைக் கழுவிக் கொள்ளலாம்! ஆம், ஐயா, அது மாத்திரமே உன் உரிமை. அது முழுவதுமாக உன்னைத் தேவனுக்கு ஒப்புக் கொடுக்கும் உரிமை. பின்னர் தேவன் உன்னை வழி நடத்துவார். கூட்டங்களில் விசித்திரமான காரியங்களை நடப்பிக்கிறது (இன்றைய) முரட்டாட்டமே. இன்ன இடத்துக்குப் போ என்று சொல்லி உன்னைப் பரிசுத்த ஆவி வழி நடத்தும். "இது தவறு. இங்கே நிறுத்து. கூட்டத்தை நிறுத்து. அப்புறம் போ'' என்று கூறி பரிசுத்த ஆவி என்னை வழி நடத்தும். இது என் வாழ்க்கையின் அனுபவம். நீ பரிசுத்த ஆவியால் மாத்திரமே நடத்தப்பட வேண்டும். அதுதான் சரி. பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட வேண்டுமானால் நீ சாதுவாகவும் சமாதானமாகவும் இருக்க வேண்டும். சொந்த புத்தியால் எதையும் அறியும் பழக்கத்தை விட்டு விடவேண்டும். 98. ''ஓ... ஆமாம் எனக்கு எல்லாம் தெரியும், "என்பாயானால், அது உன் மூளை கலங்கிப் பேசுகிற பேச்சு. அது உனக்குப் பலனளிக்காது. எல்லா புத்தகங்களையும் படித்திருக்கிறாய். கிரேக்க மொழியும். எபிரேய மொழியும் உனக்குத் தெரியும். இந்த கர்வம் உன்னிலிருக்குமானால் புறாவுக்கு உன் கிளையில் இடமில்லை! விளங்குகிறதா? நீ அதிகம் அறிந்து அதன் பிரசங்கம் செய்வதனால், புறா உன்னை வழி நடத்த வருவதில்லை. 99. ஆட்டுக்குட்டி எதையும் அறிவேனென்று கூறிக் கொள்வதில்லை. வேறொருவரால் நடத்தப்படும் மிருகம் அது தேவனுக்கு மகிமை! உண்மை! ஆட்டுக்குட்டிக்கு ஒன்றும் தெரியாது! ஆமென்! இயேசு கிறிஸ்து என்னை இரட்சிக்க மரித்தார் என்பது மாத்திரம் எனக்குத் தெரியும். 100. கலிபோர்னியா பட்டணத்தில் நுழைந்து ஒரு மனிதன் வந்தான், "நான் கிறிஸ்துவுக்காக மூடனானேன்'' என்று எழுதப் பட்ட பலகையை தன் முன்பக்கம் மாட்டி நடந்தான். அவன் பின் பக்கம் வேறொரு பலகை இருந்தது. அது "நீ யாருடைய மூடன்'' என்றிருந்தது. அது சரி, நீ உலகத்துக்கு மூடனாக வேண்டும். அப்பொழுது பரிசுத்த ஆவி உன்னை நடத்தும், ஏனென்றால், தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளும் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறார்கள்! ரோமர் 8:1ல் எழுதியிருக்கிறபடி, நீ புறாவின் பின் நட, ஓநாயின் பின்னால் சுற்றாதே! 'ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை! ஓநாயின் பின்னால் சுற்றாதபடி புறாவின் பின் சுற்றுகிறவர்களுக்கு. ஆமென்! 101. "அன்பினால் நாள்தோறும் எனக்கு, பரலோக புறாவின் பின் செல்ல, அருள் நிரம்பவேண்டும்: எப்பொழுதும் மகிழ்ச்சியுடன், அனுதினமும் அன்பினால் நான் அவர் பின் செல்ல வேண்டும்'' என்று டாக்டர் பாடுவது வழக்கம் இந்த பிரான்ஹாம் கூடார சபைக்கும், இதர சபைகளுக்கும், தனிப்பட்ட மனிதனுக்கும்! தங்கள் உரிமைகளைத் தியாகம் செய்து ஆட்டுக்குட்டிகளாய் மாறினால், அவர்களுக்கு இது எவ்வளவு சமாதானமான நாளா யிருக்கும்! "சகோ. பிரான்ஹாமே, நான் என்ன செய்ய வேண்டும்?'' 102. நீ ஆட்டுக்குட்டியாகித் திரும்பி வா, சாதுவான குணத்துக்குத் திரும்பிவா. அப்பாவியாகத் திரும்பி வா. திரும்பி வந்து உன்னைத் தானே கிறிஸ்துவுக்கு ஒப்புவி. முயற்சி செய்யாதே. எதையும் அறிய ஆரம்பம் செய்யாதே. தாழ்மையாகவும், சாந்தமாகவும், மௌனமாகவும், சாதுவாகவும் நட, பின்னர் புறா உன்னை நடத்தும். நீ வேண்டாத பேச்சைக் கேட்கப் போனால், கோபப்பட்டால், நீ உன் உரிமைகளை எண்ணிப் பார்க்கத் துவங்கினால், புறா பறந்தோடிப் போகும். பிறகு அது உனக்குக் கிடைக்காது. சபையே, இன்று காலை புறா உனக்குத் தூரமாக இல்லை. உன் சுபாவம் மாறட்டும் என்று அது வெளியே காத்துக் கொண்டு இருக்கிறது. ஆமென். 103. இன்று நீ உன் உரிமைகளைத் தியாகஞ் செய்வதே நீ செய்ய வேண்டியக் காரியம். தேவன் உன் உரிமைகளை உன்னிலிருந்து சிரைத்துப்போட விடு. ஆமென் ஒரு சிறிய ஆட்டை வெட்டி, தோலுரித்து, ஈக்கள் சூழக் கொக்கியில் மாட்டி, வெட்டி வெட்டி விற்பதை அது எப்படி சகிக்கிறது என்று உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? (சகோ. பிரான்ஹாம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு எப்படி மூச்சு வாங்குகிறது என்பதை செய்துக் காண்பிக்கிறார் - ஆசி). அதன் உரிமைகளை எல்லாம் உரித்துப் போடுகிறார்கள். ஆனாலும் அது எதையும் பொருட்படுத்தாமலிருப்பதை நினைத்துப் பாருங்கள். ஐயா, ஆமாம்! நீ உன் உரிமைகளைத் தியாகம் செய். அதுதான் நீ செய்ய வேண்டியது. நீ உன் உரிமைகளைத் தியாகம் செய்யவேண்டும். நீ செய்யவேண்டும். கர்த்தரின் வார்த்தை உன்னிலிருக்கும் எல்லா உலக சுபாவத்தையும் இச்சைகளையும், சிரைத்துப் போட அனுமதிக்க வேண்டும். அப்போது நீ கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய மனிதனாவாய். 104. சில காலத்துக்கு முன் ஆப்பிரிக்காவிலே நான் ஒரு வயதான பரிசுத்தவானுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர், ''சகோ. பிரான்ஹாம், நீர் தெய்வீக அனுபவத்தில் விசுவாசிக்கிறீரா, என்றார்.'' "ஆம், என் சகோதரனே'' என்றேன். 105. "பல ஆண்டுகளுக்கு முன், நான் என்னை ஒரு பெரிய பரிசுத்த வான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையான கிறிஸ்த வன் என்று எண்ணினேன். எபிரேய மொழியை நன்கு அறிந்திருந்தேன். வார்த்தையை நன்றாக உச்சரிக்கத் திறமையிருந்தது. யார் என்னிடம் வந்தாலும் வேதாகமத்தைப் பற்றி பேசுவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். நான் எதைப் பேசுகிறேன் என்பதை நன்கு அறிந்திருந்தேன். என்னுடைய சிறிய சபை ஒரு மலையின் மேல் இருந்தது. கார் ஓட்டிக்கொண்டு போய், மலையின் அடிவாரத்தில் நிறுத்திவிட்டு, புதர்களின் வழியாக சுமார் 400 கெஜ தூரம் நடந்துதான் சபைக்குப் போக வேண்டும். "நான் மலையின் மேல் ஏறி ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். சபையிலே ஒரு பெரிய போராட்டம் இருந்தது. கட்சிகள் ஒன்றோடொன்று இடிபட்டுக்கொண்டிருந்தன. அப்படிப்பட்டவர்கள் எதையாவது ஒன்றைக் கிளப்பிக்கொண்டிருப்பார்கள் என்பது உமக்குத் தெரியும்.'' ''ஆம், ஐயா'' என்றேன் நான். 106. தொடர்ந்து அவர், "நான் மேல் நோக்கி நடந்து கொண்டிருக்கையில், யாரோ என்னைப் பின்தொடர்ந்து வருவதை உணர்ந்தேன்.'' ''நான் நின்று, பின் தொடர்ந்து வருபவருடன் பேசிக் கொண்டே போக நினைத்தேன் " அது ஒரு நல்ல காரியம். நீ சற்று காத்திருப்பது நல்லது. ''நான் மலை மேல் ஏறினதும் பின் தொடர்ந்து வந்தவரும் என்னை வந்து சேர்ந்தார். அவர் முதுகில் அவருடைய உருவத்தைவிடப் பெரிதான ஒரு மூட்டை இருந்தது. அவருடைய மூச்சு திணறினது. அடிமேல் அடிவைத்து மலைமேல் ஏறினார். இந்த மூட்டையை மலைமேல் கொண்டுவர உமக்கு உதவி செய்யட்டுமா?' என்று கேட்டேன்." "வேண்டாம், இதை நானே சுமக்கவேண்டும்'' என்றார் அவர். "நான் அவருடையக் கைகளைப் பார்த்ததும் நான் கண்டது தரிசனம் என்பதை உணர்ந்தேன். நான் முகங்குப்புற விழுந்து, ''கர்த்தாவே, நீர் இந்த உலகத்தின் பாவத்தை அந்த மூட்டையிலா கட்டுகிறீர்?'' என்று கேட்டேன். அதற்கு அவர், 'இல்லை, உன்னுடையப் பாவங்களை கட்டுகிறேன். நீ எழுந்து நின்று நீதியாய் நடக்க, இந்த மூட்டையைச் சுமந்து மலை மேல் ஏறினேன்'' என்றார். 107. அதுதான் வழி. நாம் நம்மை சற்று சுற்றிப் பார்த்தால், அவர் நமது பாவங்களை மூட்டை கட்டுகிறார் என்பதை உணருவோம். இந்த செய்தி உன்னை வெட்கப்படுத்தவில்லையா? நாம் செய்யும் கேடான கொடூரமான பாவங்கள் மூட்டை கட்டப்படுகிறது என்று விளங்கவில்லையா? 108. கொஞ்சகாலத்துக்கு முன், வேட்டைக்குச் சென்றிருந்தேன். (நான் வேட்டையாட பிரியப்படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்). மலைப்பிரதேசத்தில் ஒரு துஷ்டன் இருந்தான். நான் புறாக்குஞ்சுகளையும் மான்குட்டிகளையும் சுடுவதில்லை என்பதைக் குறித்து அவன் என்னை கேலி செய்வான். நான் அவனிடம், 'அது மிருகத்தனம். உண்மையான வேட்டைக்காரனைப் போல நீ ஏன் கிழமானையும் சாகப் போகும் கிழ மிருகங்களையும் வேட்டையாடு வதில்லை? தேவன் அவைகளை நமக்குத் தந்தார். ஏன் வாலிபத் தாய் மிருகங்களைச் சுடுகிறாய்.'' என்று கேட்டேன். 109. "நீர் ஒரு கோழை மனதுடைய பிரசங்கியார்' என்று சொல்லி கேலி செய்துக்கொண்டே இருப்பான் அவன். 110. ''இப்பொழுது .... பார்... நான் பசியாக இருந்து அது குட்டிமான்களொன்றை விரும்பினால், தேவன் அதை எனக்குக் கொடுப்பார் என்று நம்புகிறேன். ஆனால் அவைகளை வீணாய் துப்பாக்கியால் சுட்டு உபயோகிக்காமல் விட்டெறிவது... நான் சொன்னதைக் கேளாமல் அவன் சீட்டியடித்து ... மான்குட்டி கத்துவதைப்போலவே விசிலடித்து, எனக்குப் பதில் சொல்லாமல் சென்றுவிட்டான். நாங்கள் ஒரு நாள் அடர்த்தியான செடிகள் நிறைந்த காட்டிலே வேட்டையாடிக் கொண்டிருக்கையில், அவன் சுமார் 8 அல்லது 10 குட்டிமான்களைச் சுட்டான். அந்த மிருகங்களின்; பின்னங்கால்களை வெட்டி எடுத்துக்கொண்டு மற்றவைகளை அங்கேயே விட்டுவிட்டான். அவனை அவமானப்படுத்த நான், ''நான் வெட்கமற்றவனாக இருந்தால் இத்தகைய காரியத்தை செய்வேன். நீ இப்படிச் செய்கிறாயே, உனக்கு...'' அதற்கு அவன் "போய்யா... நீங்க கோழை இருதயமுள்ள பிரசங்கியார்'' என்றான். 111. ஒருநாள் அவன் புதர்களின் பக்கம் ஒரு குட்டிமான் அழுவதைப் போல விசிலடித்தான். உடனே ஒரு தாய் மான் தன் தலையைச் செடிகளிலிருந்து வெளியே நீட்டினது. குட்டிமானுக்கு என்ன தீங்கு வந்திருக்குமோ என்று அதிர்ச்சியடைந்து நான்கு திசைகளையும் நோக்கினது. அவன் துப்பாக்கியை எடுத்து அதைச் சுட குறிபார்த்தான். தாய்மான் அவனைப் பார்த்தது. என்ன நடந்தது தெரியுமா. குட்டிமான் அழும் குரலைப் போலிருந்த சத்தத்தைக் கேட்டத் தாய் மான் அவனிடமிருந்தத் துப்பாக்கியைப் பார்க்கவில்லை. ஆபத்திலிருக்கும் குட்டிமானைத் தேடினது. தாயின் உண்மையான அன்பு காட்சியளித்தது. துப்பாக்கியின் குண்டு செல்லும் துவாரத்தை பார்த்தவண்ணம் மரணத்துக்கும் அஞ்சாமல், அது எதிர்நோக்கி புறப்பட்டது. என்ன நடந்தது? தாயின் அன்பில் திகழ்ந்த அந்த மான்குட்டியைத் தேடி குதித்து வந்த தாய் மான் அவன் முன் நிற்கவே, அவனுடையத் துப்பாக்கியைக் கீழே எறிந்தான். அவன் பின்பக்கம் திரும்பி என்னிடம் ஓடிவந்து, என் கையைப் பிடித்து "வில்லியம், எனக்காக ஜெபம் செய். நான் செய்த பாவத்துக்கு இந்த பதில் போதும்'' என்றான். தாய் மான் காட்டின வீரத்தின் காட்சி இவனை இப்படிச் செய்தது. 112. ஓ.... பரலோகத்திலிருக்கும் தேவனுடைய அன்பை இந்த உலகம் நமது இருதயங்களிலே காணுமானால், எவ்வளவு வித்தியாசப்படும் புறாவின் ரூபத்தில் வந்திருக்கும் தேவனை நாம் நமது உள்ளத்தில் கிரியை செய்யாவிட்டால் அவர் நம்மை எந்த அளவு சாந்தமாகவும் தாழ்மையாகவும் மாற்றுவார்! 113. அந்தக் காட்டுப்புதரிலே நின்று ஜெபித்து அவனைக் கர்த்தராகிய இயேசுவினிடம் நடத்தினேன். அந்நாளிலிருந்து அவன் ஒரு உண்மையான வேட்டைக்காரனாய் மாறினான். 114. அவன் தனக்கு உரிமை உண்டு என்று நினைத்தது உண்மை. எதைச் செய்ய விரும்பினானோ அதையே செய்து வந்தவன். "என் நிலத்திலிருக்கும் அல்பால்பா மரத்தின் (alfalfa tree) இலைகளை அவைகள் (மான்கள்) தின்றுவிடுகின்றன" என்றான். 115. "அது சரிதான். ஆனாலும் மான்குட்டிகளைச் சுடுவது மனிதத் தன்மையல்ல. உன் உரிமைகளைத் தியாகம் செய்ய வேண்டும்'' என்றேன். நாம் நம்முடைய உரிமைகளைத் தியாகம் செய்யத் தேவன் கிருபை புரிவாராக! 116. சுமார் 100 வருடங்களுக்கு முன் வட அமெரிக்காவின் தென் பாகத்தில் ஒரு கிறிஸ்தவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் தானியேல் கரி. நல்ல மனிதன். தேவனுக்குகந்தவன். பரிசுத்தவான். உண்மையான கிறிஸ்தவன். ஜனங்கள் அவனைப் புகழ்ந்தனர். நேர்த்தியானவன். அவனைப் பற்றிச் சொல்லப்படும் கதை இவ்வண்ணமுள்ளது : அவன் கண்ட தரிசனத்தில் அவன் மரித்து பரலோகம் சென்றானாம். அங்கே முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வாசலைக் கண்டு அங்கே சென்றானாம் அங்குள்ள குமாஸ்தா கதவண்டை வந்து, "நீ யார்? என்று கேட்டான். 117. நான் சுவிசேஷகனாகிய தானியேல் கரி. நான் கிறிஸ்துவுக்கு ஆயிரக்கணக்கில் இருதயங்களை ஆதாயப்படுத்தினேன். பூமியில் என் வாழ்வு முடிந்து விட்டது. அங்கே எனக்கு இடமில்லை இன்று காலை இங்கே வந்துள்ளேன்'' என்றான். 118. பாவியே, இத்தகைய காலை வேளை உனக்கும் வரப்போகிறது. விசுவாசத்திலிருந்தும் நழுவிப் போகிறவனே. உனக்கும் இந்த நாள் தூரமில்லை. பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தும் உங்களுக்கும் இத்தகைய நாள் ஒன்று உண்டு. தாழ்மையாகவும் சாந்தமாகவும் உன்னால் இருக்க முடியவில்லை. நீ உன் வாழ் நாளெல்லாம் உன் ஆத்துமாவுக்காக அழுததில்லை. நீ உன் தப்பிதங்களை உணர்ந்த தில்லை. கற்பு உன்னைவிட்டு நீங்கிவிட்டது. ஆனால் இத்தகைய காலை நேரம் உன் கதவுக்கும் வர இருக்கிறது. சாந்தமான பரிசுத்த ஆவி உன் இருதயத்தைத் தட்டும் போது நீ உன் உள்மனதைப் பூட்டிவைத்திருக்கிறாய்? 119. ஆகவே தானியேல் கரி அந்த வாசலிலே நிற்க, 'உன் பெயர் இங்கே இருக்கிறதா என்று பார்க்கிறோம்'' என்று சொல்லி பெயரைத் தேடினார்கள். ஆனால் அந்த பிரசங்கியின் பெயர் அங்கே இல்லை. "தானியேல் கரி என்னும் பெயர் இங்கே இல்லை'' என்றார்கள். 120. "ஏன்? நான் உண்மையில் ஒரு பிரசங்கியாச்சே. நான் கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தினேனே. நான் நல்லதையே செய்தவனாயிற்றே.'' 121. ஆனால் முத்துமாளிகையின் குமாஸ்தா, 'தானியேல் கரி என்னும் பெயர் இங்கே இல்லை என்று சொல்ல வருந்துகிறேன். உமது பெயர் இங்கே இல்லை! நீர் செய்ய வேண்டியதை உமக்குச் சொல்லுகிறேன். உமக்காகப் பரிந்து பேச இங்கே எங்களுக்கு உரிமை இல்லை. வெள்ளை சிம்மாசன நீதிமன்றத்தில் உமது நிலைமையை முறையிட வேண்டுமானால், நீர் அப்படி செய்யலாம். ஆனால் உமக்குக் கிருபை இங்கே கிடையாது. ஏனென்றால் உமது பெயர் இங்கே இல்லை. இங்கே உமக்குக் கிருபையும் இல்லை, நீர் உமது கேஸை அப்பீல் செய்ய விரும்புகிறீரா?" என்று கேட்டான். அப்பீல் செய்வதை தவிர நான் வேறென்ன செய்ய முடியும்!" என்றார் தானியேல். 122. "நீர் சென்று வெள்ளை சிம்மாசன நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்'' 123. ஒரு மணிநேரம் தானியேல் கரி ஆகாயவிரிவிலே சென்றாராம். போய்கொண்டிருக்கையில் வெளிச்சம் அதிகரித்துக் கொண்டே இருந்ததாம். அது சூரியனைவிட நூறுமடங்கு, ஆயிரம் மடங்கு அதிக வெளிச்சமாக இருந்ததாம். அவர் நடுங்க ஆரம்பித்தாராம். வெளிச்சத்தின் நடுவிலே வந்து சேர்ந்ததும் ஒரு சத்தத்தைக் கேட்டாராம்: "நீ உலகத்திலே பரிபூரணமாக சுத்தமான வாழ்வு வாழ்ந்தாயா?'' (என்ற வார்த்தை வெளிச்சத்திலிருந்து வந்ததாம்). "இல்லை. நான் முழு சுத்தத்துடன் வாழவில்லை" என்றாராம் நடுக்கத்துடன். ''எப்பொழுதும் எல்லாருடனும் யோக்கியமாய் நடந்தாயா?'' 124. இல்லை, ஒரு சிலவற்றில் நான் யோக்கியமாக நடந்ததில்லை." யோக்கியனாய் நடந்ததில்லை.'' "நீ உன் வாழ்க்கையில் எப்பொழுதும் உண்மையைப் பேசினாயா?" 125. "இல்லை, ஆம் இல்லை.... ஞாபகத்துக்கு வருகிறது.... நான் எல்லா சமயத்திலும் உண்மையை ... ஒரு சிலவற்றில் உண்மையைப் பேசவில்லை!'' 126. " மற்றவருடைய பொருளை நீ அபகரித்தது உண்மைதானா? எந்த பொருளாவது? பணமாவது வேறெதுவும் உனக்கு சொந்தமில்லாதது" 127. "இல்லை .... ஆம்..... நான் மற்றவரின் பொருளை அபகரித்தது உண்மை " (தன்னை உலகத்தில் நல்ல மனிதன் என்று எண்ணி யிருந்தார். ஆனால் அங்கே அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் பட்டார்!). "அப்படியானால் நீ பரிபூரணமாக வாழவில்லை." ''ஆம், நான் சுத்தமாக வாழவில்லை" என்றார் தானியேல் கரி. 128. தானியேல் கரி சொன்னபடி, ''அந்த பெரிய வெளிச்சத்திலிருந்து திடீரென்று, "நீ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டாய்!" என்னும் வெடியைப்போல ஒரு சத்தம் புறா உட்கார்ந்திருந்த கிளையின் வழியாய் வரும் என்று எதிர்பார்த்தேன். அச்சமயத்திலே பின்பக்கத்திலிருந்து தாயின் சத்தத்தைவிட ஒரு அருமையான சத்தம் கேட்டேன். என் தாயின் முகத்தைக் காட்டிலும் அன்பான முகத்தைக் காண நான் திரும்பினேன்.'' என் பின்பக்கம் நின்றவர் அன்புடன் "பிதாவே இந்த தானியேல் கரி எனக்காக நின்றான். இவன் அசுத்தமாக வாழந்தது மெய்தான். ஆனால் உலகில் எனக்காக உழைத்தான். இவன் உலகில் எனக்காக நின்றான். ஆகவே இன்று நான் இவனுக்காகப் பரலோகத்திலே நிற்கிறேன். அவனுடைய பாவங்களை என் கணக்கில் கூட்டிவிடும்" என்றார். 129. நீ இன்று அவரைத் துக்கப்படுத்தி வெளியே தள்ளினால், சகோதரனே, அங்கே உனக்காகப் பரிந்து பேசப் போவது யார்? என்னால் இனி பிரசங்கம் செய்யக் கூடவில்லை. ஜெபத்தில் தலைவணங்குவோமாக. 130. அன்புள்ள தேவனே, மரித்த அன்புள்ள ஆட்டுக்குட்டியே, தாழ்மையான, எளிய, சாந்தமான ஆட்டுக்குட்டியே, நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் இருந்தன. ஆனால் உமக்குத் தலைசாய்க்க இடமில்லாமலிருந்தது. மகிமையின் தேவனாகிய நீர் பிறந்த போது உமக்கு உடுத்த அவர்களிடம் துணி இருக்கவில்லை. ஓ தேவனே, நியாயத்தீர்ப்பின் நாளிலே, இன்றைக்கு என்னிடமிருக்கும் நல்ல துணிமணி என்ன பிரயோஜனமாகும்? எனக்குக் கார் இருந்து என்ன பயன்? நல்ல வீடு இருந்து என்ன பயன்? இந்த உலகத்தின் என்ன பொருள் அங்கே பயன்படும்? இவ்வுலகத்தில் நீர் சிநேகிதரற்று இருந்தீர். யாரும் உம்மை நேசிக்க வில்லை, உமக்கு உணவளிக்க யாரும் இருந்ததில்லை. உமக்கு உதவி செய்யவும் யாரும் இருந்ததில்லை. அன்று நீர், "நான் பசியாக இருந்தேன் நீங்கள் என் பசியைத் தீர்க்கவில்லை. நான் வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை" என்பீர். கர்த்தாவே, நாங்கள் வைத்திருக்கும் பொருட்களெல்லாம் அன்று எங்களுக்கு என்ன பயன் தரப்போகின்றன? உமக்காக நாங்கள் சாட்சியாக நிற்க உதவி செய்யும். அப்பொழுது, அந்த நேரம் வரும்போது, சர்வத்துக்கும் வல்லவரும் எல்லாவற்றையும் அறிந்த வரும், எங்கும் நிறைந்தவருமாகிய உமது சமூகத்தில் இருப்போம். ஓ, தேவனே, அந்தப் பெரிய ஒளியில் அந்த புறா தன் சிறகை விரித்து உட்காரும்போது, வெளிச்சம் அந்தமில்லா எல்லைகளுக்கும் எட்டும், அப்போது அந்த வெளிச்சத்தில் நீர் உட்காருவீர். 131. தேவரீரின் சந்நிதானத்திலே நான் தனியாக நிற்க வேண்டியிருக்கும். என் தாயும் என் தகப்பனும், என் சகோதரரும், என் சபைக்கு போதகரும் என் மனைவியும் என் குழந்தைகளும் அங்கே என்னுடனே நிற்கமாட்டார்கள். (சகோ. பிரான்ஹாம் அழுகிறார்ஆசி) ஓ... ஓ.... தேவனே, அப்பொழுது நான் என்ன செய்வேன்? கர்த்தாவே, அப்பொழுது நான் என்ன செய்வேன்! அந்த நேரம் இன்று சூரியன் அஸ்தமிக்குமுன் வரலாம். நான் என்ன செய்வேன்? நான் என்ன செய்வேன்? ஓ, கிறிஸ்துவே, இன்று நான் உமக்காக நிற்பேன். நான் இன்றைக்கே முடிவு செய்தேன். நான் மற்றவர்களை இழிவாய்ப் பேசுவதை விட்டுவிட்டேன். என் கோபத்தை விட்டு விடுகிறேன். எல்லா வேற்றுமைகளையும் விட்டு விடுகிறேன் .....கர்த்தாவே, எல்லா வேற்றுமைகளையும் விட்டு விடுகிறேன். கர்த்தாவே, என்னிடத்திலிருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டாவது என்னை ஏற்றுக்கொள்ளும். இன்று உம்மிடத்தில் நிற்கத் தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் இழந்து போனாலும் உம்மை விடமாட்டேன். என்னில் இருக்கும் எல்லா தன்னலத்தையும் கர்வத்தையும் வேற்றுமைகளையும் அகற்றுவீராக. உலகத்தின் எல்லா இச்சைகளையும் விட்டு, தோலுரிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியாக உமக்கென்று நிற்க கிருபை செய்யும். சினிமா, துர்ச்சிநேகிதரோடு கூடுதல் , அவலட்சணமான உடை உடுத்துவது, மேக்கப், உதட்டுச் சாயம், நகத்தில் போடப் படும் வர்ணம் எல்லாவித அலங்காரங்களையும் விட்டு விடுகிறேன். ''உலகத்தாரைப் போல் நடக்காதே; உலகத்துடன் கூடாதே; அவர்களை விட்டு வெளியே வாருங்கள்'' என்றீர். ஓ, தேவனே, இன்று என் தோலை உரித்தாகிலும் என்னை உம்முடைய ஆட்டுக்குட்டியாக்கி நான் மௌனமாக இருக்கச் செய்யும். கர்த்தாவே உலக சுபாவத்தை என்னிலிருந்து உரித்து எடுத்தருளும்; நான் மௌனமாகவும் ஓடிவிடாமலும் இருப்பேன். 132. தேவனே, உமது அன்பு என்னில் எவ்வளவு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது! ஒரு சமயம் நான் எல்லாவற்றையும் இழக்கச் செய்தீர். என் மனைவி, என் குழந்தை, என் தகப்பனார், என் சகோதரன் எல்லாரையும் என்னிடமிருந்து எடுத்துக் கொண்டீர் அப்பொழுது என் இருதயத்தால் உம்மை நேசிக்கக் கற்பித்தீர். பின்னர் நீர் என்னை எவ்வளவாய் ஆசீர்வதித்தீர் ! நீர் எவ்வளவு நல்லவராயிருந்து வருகிறீர் நான் இருப்பதும் இருக்கப் போவதும் உம்மாலே இருக்கக் கிருபை செய்யும், என் தப்பிதங்களை அறிக்கையிடுகிறேன். என் கெட்ட நடத்தை, கெட்ட எண்ணம் முதலியவற்றையும் நான் அறிக்கையிடுகிறேன். கர்த்தாவே, இவைகள் எல்லாவற்றையும் என்னிலிருந்து உரித்துப்போடும். நான் உம்முடைய ஆட்டுக்குட்டியாக மாற விரும்புகிறேன். 133. அது மாத்திரமல்ல, கர்த்தாவே, இன்று காலை இங்குள்ள எல்லாரையும் ஆட்டுக்குட்டிகளாக மாற்றியருளும். செம்மறியா டாக மாற விரும்பும் அனைவரையும் அரவணைத்தருளும். கர்த்தாவே அவர்களின் உலகத் தோலை உரித்தருளும். அவர்களுடையக் கால்களை சுவிசேஷக் குவியலண்டை கொண்டு வாரும். பரிசுத்த ஆவியின் மூலம் அவர்கள் உலகத்தை நேசிக்கிறதை உணரப்பண்ணி, மனந்திரும்புதலுக்கு நடத்தியருளும். உலகத்தையும் உலகத்திலுள்ள எல்லா காரியங்களையும் இவர்களிலிருந்து உரித்துப் போடும். இன்று காலையில் உரித்துப் போடும், கர்த்தாவே, அப்பொழுது சமாதானத்தோடும் தாழ்மையாயும் உமது சமூகத்தில் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாய் நிற்பார்கள். இதை எங்களுக்குச் செய்யும். 134. நான் உம்மை நேசிக்கிறேன். நான் உமக்கு ஊழியஞ் செய்வேன். சீதோஷ்ண நிலை புழுக்கமானாலும் சரி, நான் விரும் பினாலும் விரும்பாவிட்டாலும் சரி, நான், (ஊழியத்துக்கு) போவேன் நான் உமக்காக நிற்க ஆசிக்கிறேன். ஏனென்றால் கடைசி நாளிலே நீர் எனக்காகப் பரிந்து பேசுவீர். "இவன் எனக்குச் சாட்சியாக இருந்தான்: இப்பொழுது நான் இவனுக்குச் சாட்சியாக இருக்கிறேன்'' என்பீர். இன்று நான் நிற்க கிருபை செய்யும் கர்த்தாவே. 135. ஒவ்வொரு தலையும் ஒவ்வொரு இருதயமும் வணங்கியிருக்கையில், உங்களில் யாராகிலும் மனந்திரும்பி, ''நான் செய்தது தவறு, நான் சொந்த வழியிலே நடந்தது தவறு" என்பதை உணருகிறீர்களா? அப்படியானால், இன்று காலை உன் கெட்ட சுபாவத்தைத் தேவன் உரித்து எடுத்துப்போட மனதுள்ளவர்களாயிருக்கிறீர்களா? தேவன் உன்னை உண்மையான ஆட்டுக்குட்டியாக்க நீ விரும்பினால், உன் கையை உயர்த்து, ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. வேறே யாரும் இல்லை? தேவனே, உலகத்தை என்னிலிருந்து உரித்தருளும். நான் உம்முடைய செம்மறியாடு, நான் மௌன மாயிருப்பேன். உலகத்தை நீர் என்னிலிருந்து வெட்டி அகற்றும்.'' சகோதரனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக ஸ்திரீயே, உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. ஸ்திரீயே, உன்னை தேவன் ஆசீர்வதிப் பாராக, சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக "என்னிலுள்ள மோசமானவைகளை உரித்து அகற்றும்'' என்று ஜெபஞ் செய்யுங்கள். (சகோதரி கெர்ட்டி) உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, "உமக்காக இன்று காலையில் நான் நிற்கிறேன். உலக, எண்ணங்களை என்னிடமிருந்து உரித்து அகற்றும். தோல் உரிக்கப்பட்ட ஆட்டைப்போல நான் நிற்பேன். உலகத்தின் எல்லா பழைய சரக்கும் என்னைவிட்டு அகலட்டும். நான் உம்முடையவனாக இருக்க விரும்புகிறேன். கர்த்தாவே, என்னை ஏற்றுக்கொள்ளும். நான் கையை உயர்த்துகிறேன். ஸ்திரீயே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, உம்மை தேவன் ஆசீர்வதிக்கட்டும். தேவன் உம்மை ஆசீர்வதிக் கட்டுமே, ஐயா, ஸ்திரீயே, உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக, நான் உன் கையை (உயர்த்தியிருக்கப்) பார்க்கிறேன். என் சகோதரனே, உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. சின்ன ஸ்திரீயே, உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. அது நல்லது, பின்புறம் உட்கார்ந்திருக்கும் அம்மா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நல்லது உண்மையுள்ளவர்களாயிருங்கள். "அவருக்கு இருக்கும் குணங்களைப்போல இல்லாத எல்லாவற்றையும் தேவன் எடுத்துக்களைய விரும்புகிறேன். சுயநலத்துக்குக் காரணமாயிருக்கும் யாவற்றையும், வேறுபாடான யாவற்றையும் தேவன் உரித்தெடுக்க வேண்டு கின்றேன். அவரைப் போல இருக்க விரும்புகிறேன். அது சரியா தவறா என்பதைப் பற்றி அக்கரையில்லை. எனக்கு ஒரு உரிமையுமில்லை. அவரிடம் வரும் ஒரே உரிமை எனக்குண்டு. மற்றவைகளை அவர் பார்த்துக் கொள்வார். 136. ஒரு தடவைகூட இயேசுவை மற்றவர்முன் அறிக்கையிடாத பாவி இங்கே உண்டா? இரட்சிக்கப்படாதவன் இங்கே உண்டா? இன்றைய ஜெபத்தில் உனக்காக வேண்டிக் கொள்ளவேண்டுமானால் உன் கையை உயர்த்து. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, "சகோ. பிரான்ஹாமே, நான் கிறிஸ்தவனல்ல, எந்த சமயத்தில் நான் தேவனை சந்திப்பேனோ தெரியவில்லை. கூட்டத்தை முடிக்கு முன் எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுகிறேன்.'' இப்பேர்ப்பட்ட சிந்தனையில் யாராவது இருந்தால், உங்கள் கைகளை உயர்த்துங்கள். நான் உங்களுக்காக ஜெபிப்பேன். சின்ன ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது இருக்கிறீர்களா? "நான் - ஆட்டுக்குட்டியாக மாற விரும்புகிறேன். விருப்பத்துடன் ஜெபிக்கச் சொல்கிறேன். 137. பின்வாங்கிப்போனவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனர்?'' "பின்வாங்கிப் போனேன் என்று நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். சகோ. பிரான்ஹாம்'' என்கிறீர்களா? ஆனால் பார். தாழ்மையான புறா உன்னிலிருந்து பறந்து விட்டிருக்கிறது. ஒருவரோடொருவர் நீங்கள் சகித்துப் போக முடியவில்லையானால், எங்கேயோ ஏதோ ஒரு தவறு இருக்கிறது. உனக்கு விரோதமாக யார் என்ன சொல்லி யிருந்தாலும் சரி, என்ன செய்திருந்தாலும் சரி, நீ அவர்களை இருதயத்தின் ஆழத்திலிருந்து மன்னிக்க முடியவில்லையானால், ஏதோ ஒரு குறையிருக்கிறது. ஆழத்திலிருந்து உன்னால் மன்னிக்கக் கூடவில்லை.... "உன்னுடைய கடனாளிக்கு நீ மன்னிக்காவிட்டால், பரலோகத்திலிருக்கும் உன் பிதாவும் உன்னுடைய பாவங்களை மன்னிக்கமாட்டார்'' என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். 138. இந்த கோடை காலத்திலே..... தேவன் உன்னைத் திறந்து வைத்திருக்கும் நீரூற்றுக்கு அழைத்தால், ஒரு சபையைத் தயாராக்க, உன்னை அழைத்தால், பரிசுத்த ஆவி இங்கே உட்கார்ந்து உன் இருதயத்தில் கிரியை செய்து உன்னை சாந்தமானவனாகவும், சாதுவாகவும் மாற்ற காத்துக்கொண்டிருந்தால், நீ செய்யப்போவது என்ன? ''சகோ. பிரான்ஹாமே, நான் என்ன செய்யவேண்டும்'' என்று கேட்கிறாயா? இந்த வேளையிலேயே நீ செம்மறியாட்டுத் குட்டியாய் மாறு! நீ ஆட்டுக்குட்டியாய் மாறினதும் பரிசுத்த ஆவி உடனே கீழே இறங்கிவரும். தவறான எண்ணங்களையும் தவறான யோசனை களையும் நீ வைத்திருந்தால், நீ உன் சொந்த வழியில் செல்ல விரும்பினால், நீ உன் உரிமைகளை இழக்க மறுத்தால், பரிசுத்த ஆவி வரவே வராது! 139. தலைவணங்கிக் கைகளை உயர்த்தினவர்கள் இயேசு கூறினதைக் கவனியுங்கள்; "என் வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்'' (யோவான் 5:24) இப்பொழுது நீங்கள் (இந்த) பீடத்துக்கு வரவிரும்பினால், இங்கே வந்து முழங்கால்படியிடுங்கள். நீ ஒரு காலத்தில் கொண்டிருந்த சமாதானத்துக்காகவும் அமைதிக்காகவும் ஜெபிக்கலாம். சமாதானம் உன் இருதயத்துக்குள் வரும். நாம் தலை சாய்த்தபடி "இம்மானுவேலின் இரத்தத்தால் '' என்று பாடலை பாடும் போது, நீ இங்கே வந்து முழங்கால் படியிட்டு ஜெபம் செய். யார் யார் வர விரும்புகிறீர்களோ அவர்கள் வந்து இங்கே முழங்கால்படியிட்டு ஜெபியுங்கள். "இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதனால் நிவிர்த்தியாகுமே" (கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, ஸ்திரீயே இங்கே வந்து முழங்கால்படியிடு) 140. உங்கள் தலைகளையும் இருதயங்களையும் சாய்த்து ஜெபிக்கிறீர்கள். இங்கே அதிகமான ஆசீர்வாதம் பெறுவது யார்? (உங்களை வெட்கப்படுத்த இதைக் கூறுகிறேன்) பாவம்! ஒரு கறுப்பு நிற ஸ்திரீ - கால் வீங்கியிருக்கிறது நரைத்த முடி. பீடத்துக்கு வருவதைப் பாருங்கள். 141. இங்கே சில காலத்துக்குமுன், ஒரு முதிர்வயதான கறுப்பு மனிதன் இரட்சிக்கப்பட்டான். அவன் அடிமைத்தனத்தில் இருந்த போது, இரட்சிக்கப்பட்டபோது அவன் தன் எஜமானிடம் சென்று தான் விடுதலைப் பெற்றதை அறிவித்தான். (அமெரிக்காவில் கறுப்பு மனிதன் அடிமைத்தனத்திலிருந்த காலத்திலே - தமிழாக்கியோன்). 'நீ என்ன ஆனாய்?" என்றான் எஜமான். "நான் விடுதலையானேன்'' எஜமான் அவனை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தான். 142. (இன்று காலை வெறொரு கூட்டம் இரட்சிப்புக்காக வருகிறது). "நீ விடுதலை அடைந்துவிட்டாய் '' என்று கூறினான். (பரிசுத்த ஆவி ஜனங்களை ஒரு முடிவுக்கு வரச் செய்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும் ஜெபியுங்கள்) எஜமான்: மோசே, நீ விடுதலையடைந்ததாகச் சொன்னாயா?" "ஆம் ஐயா. என் எஜமானே, நான் விடுதலைப்பெற்றேன்" 143. ''நீ விடுதலைப் பெற்றிருந்தால், நானும் உன்னை அடிமைத் தனத்திலிருந்து விடுதலையாக்குகிறேன். போ, சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்'' என்றான் எஜமான். 144. இந்த கறுப்பு நிற பிரசங்கி மரிக்கிற சமயம் அவனுடைய உடன் விசுவாசிகளாகிய வெள்ளைக்காரர் அவனைப் பார்க்க வந்தார்கள். (அவன் மயக்கத்தில் இருக்கிறதாக நினைத்தான்) அவன் தெளிந்து எழுந்திருந்து, "நான் செத்துப்போய்விட்டேன் என்று நினைத்தேன்'' என்றான். (பீடத்தண்டை வரும் ஒருவரை நோக்கி சகோ. பிரான்ஹாம்: 'என் சகோதரனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. முழங்கால்படியிட்டு ஜெபம் செய்'' என்கிறார்). விடுதலையான மனிதன், "நான் செத்துப்போய் விட்டேன் என்ற நினைத்தேன்'' என்றான். "நீ என்ன பார்த்தாய் மோசே?'' என்று வெள்ளைக்கார சகோதரர் கேட்டனர். 145. ''நான் வாசல் வழியாய் நுழைந்து போய் இயேசுவைப் பார்த்தேன். நான் நின்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு தேவதூதன் வந்து, "வா'' மோசே, நீ பல ஆண்டுகளாக சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்தாய். உனக்காக ஒரு வஸ்திரமும் ஒரு கிரீடமும் காத்துக்கொண்டிருக்கின்றன" என்றான். "அவனைப் பார்த்து நான், என்னிடம் வஸ்திரத்தையும் கிரீடத்தையும் பற்றி பேசாதே. எனக்கு வஸ்திரமும் வேண்டாம், கிரீடமும் வேண்டாம். நான் அவரைப் பார்த்தாலே போதும்" என்றேன். கிறிஸ்தவர்கள் இத்தகைய விசுவாசத்தில் இருந்தால்... 146. சில காலத்துக்குமுன், நான் சிக்காகோ பட்டணத்தின் பொருட்காட்சி சாலையை சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு நீக்ரோவைக் (கறுப்பு மனிதனை) கண்டேன். அவன் தலைமுடியின் நுனிப்பாகம் நரைத்திருந்து. தன் தொப்பியைக் கையில் வைத்து சுற்றித்திரிந்தான். நான் அவனைக் கண்டேன். அவன் அழ ஆரம்பித்தான். கண்ணீர் கலங்கி கன்னங்களின் மேல் பெருகினது. அவன் சிறிது நேரம் ஓர் இடத்தை உற்றுப்பார்த்து விட்டு, திடீரென்று பின்புறம் குதித்து அழ ஆரம்பித்தான். அவன் ஜெபித்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவனருகில், சென்று "ஐயா?" என்றேன். "ஆம், என்ன வெள்ளை சிநேகிதனே" என்றான். "நீ துக்கப்படுவதை..... என்ன துக்கம்? துக்கத்துக்குக் காரணம் என்ன?" என்றேன். 147. நீர் என் இந்தப் பக்கத்தைப் பார்த்தீரானால், மரித்துக் காய் காய்த்திருப்பதைக் காண்பீர், நான் ஒரு காலம் அடிமையாயிருந்தேன். அந்தக் கண்ணாடிக் கூட்டிலே ஒரு உடை இருக்கிறது, ''ஆம், அது ஒரு உடை, அதிலென்ன புதுமை?" 148. ''அதின்மேல் இருக்கும் கறை, அது ஆபிரகாம் லிங்கன் என்பவருடைய இரத்தக்கறை, அந்த இரத்தம் என் அடிமைத்தனக் கச்சையை என் சரீரத்திலிருந்து கழற்றிவிட்டது. வெள்ளையரே, அந்த சம்பவம் ஒரு மனதைக் கரைக்க வல்லதல்லவா?'' என்றான். 149. நான் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, "சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. என்னை துக்கத்துக்குள்ளாக்கும் வேறொரு இரத்தம் எனக்குத் தெரியும்'' என்றேன். ''அந்த இரத்தமும் எனக்குத் தெரியும், ஐயா" என்றான். 150. ''அவர் என் அடிமைக் கச்சையை என் இடுப்பிலிருந்து கழற்றிவிட்டார்'' என்றேன். ஒரு காலத்தில், ஞாயிற்றுக்கிழமையில் நான் ஓடுவதும் ஆடுவதுமாக இருந்து. மற்றவர்களிடம் கெட்ட கதைகளைச் சொல்லி சிரிப்பது வழக்கம். ஓ, தேவனே, நான் எந்த அளவு அழுக்காக இருந்தேன்! என் இருதயத்தின் கறைகளை நீக்கியருளும், ஓ, அவர் என் இடுப்பிலிருந்து அந்தக் கச்சையை எடுத்துவிட்டதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். கறையெல்லாம் போய்விட்டது. அவர் எனக்குப் பதிலாக நின்றார். 151. சிறிது காலத்துக்குமுன், இங்கே ஒரு ஸ்திரீ இருந்தாள். விபச்சாரக்காரி, கெட்டவள் என்று முடிவு செய்ய இருந்தேன். அப்பொழுது தேவன் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். நான் ஜெபம் செய்ததும் என்னுடைய பாவங்கள் அவளுடையப் பாவங்களைவிட அதிகமாய்த் தென்பட்டன. நான் அவளருகிற்சென்று, நான் ஒரு ஊழியன் என்பதை அறிவித்து, அவளுடைய பாவத்தையும் அவளுக்கு இருந்த இரண்டு அந்தரங்க சிநேகிதர்களின் பாவங்களையும் அவர்களுக்கு உணர்த்தினேன். சுமார் 65 அல்லது 70 வயதுள்ளவள். நாங்கள் கூடி ஜெபித்தோம். அவர்கள் தங்கள் இருதயங்களைக் கிறிஸ்துவுக்குக் கொடுத்தார்கள். 152. அடே... அப்பா! என்ன வித்தியாசம்! நீயும் இத்தகைய பாவியா? பரிசுத்த ஆவி உன்னைத் தொடாத அளவுக்கு நீ பாவம் செய்தாயா? புறா ஒரு வேளை உன்னை விட்டுப் போய் திரும்பி வராமலிருக்கும். 153. (ஒரு சிறுமி பீடத்தண்டை வருவதை சகோ. பிரான்ஹாம் கண்டு, "கண்ணே, உன்னைத் தேவன் ஆசீர்வாதிப்பாராக'' என்கிறார்.'" அந்தச் சிறுமி அறியாதவள்'' என்கிறீர்கள் போலும். அவளுக் குத் தெரியும். தெரியும் நீங்களெல்லாரும் படித்திருக்கும் அளவுக்கு இவள் கதைப் புத்தகங்களையும் காதல் கதைகளையும் படித்திருக்க மாட்டாள். இவள் இளையவள். பாதகமில்லை. "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்'' என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். 154. இன்னும் யாராவது வர மனதாயிருந்தால், பீடத்தை வந்து சேருங்கள். பீடம் இன்னும் சிறிது நேரம் திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. நாம் தேவனைத் துதித்துப்பாடி இங்கே இருக்கும் வியாதியஸ்தர் - பாவிகளுக்காக ஜெபிப்போம் வாருங்கள்: மா பாவியான கள்ளனும், இவ்வூற்றில் மூழ்கினான் (ஆம் எல்லா பாவமும் போய் விட்டது; இல்லையேல் அந்தக் கள்ளன் மரித்திருப்பான்) மன்னிப்பும் மோஷானந்தமும்அடைந்து பூரித்தான். 155. நீ இப்பொழுது வரமாட்டாயா? வரமாட்டாய்? "எனக்கு எல்லாம் தெரியும்' என்கிறா? நீ நல்லதைச் செய்ய அறிந்திருந்து நீ செய்யாமற்போனால் அது உனக்குப் பாவமாயிருக்கும்'' என்று வேதாகமம் கூறுகின்றது வரமாட்டாயா? நீதான் பாவி என்பதை அறிந்திருக்கிறாய், எழுந்து நட. பீடத்துக்கு வா. அவரை அசட்டை செய்தது தவறு என்பதை தேவனுக்குச் சொல். பரிசுத்த ஆவி மீண்டும் வந்து உன்னை சுத்தமான குணமுள்ளவனாவும், மௌனமானவனாயும் ஆக்கட்டும். வரமாட்டாயா? நீ செத்துப்போன பிறகு உனக்காகப் பரிந்து பேச யாரும் வரமாட்டார்கள். இன்று காலை அவருக்காக நில். அவர் உனக்காக நிற்பார். 156. சகோதரனே, உன்னைத் தேவன் ஆசீர்வதிப்பாராக. காத்துக் கொண்டிருப்பவர்கள் இத்தனை பேர்தானா? இந்த சபையிலே வெறும் 15 பேர்தானா தங்களைக் குற்றவாளிகள் என்று அறிந்தார் கள்? மற்றவர்கள் சமாதானமானதும் சாந்தமானதும் மௌனமானதுமான வாழ்க்கையை நடத்துகிறவர்களா? (இவைகள் பரிசுத்த ஆவி கேட்கும் கேள்விகள்): நீ குற்றங்களை மன்னிக்கிறாயா? உனக்கு விரோதிகள் இல்லையா? பாவிகளுக்கு கிடைக்கும் தண்டனையை நீங்கள் தாண்டிவிட்டீர்களா? அஞ்ஞானி களைப் போல வாழ்வதை விட்டு விட்டீர்களா? அவர்களின் வாழ்க்கையை விட உன் வாழ்க்கை சரிபடுத்தப்பட்டு இருக்கிறதா? பரிசுத்த ஆவி உன் மனதின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து உன்னு டைய வாழ்க்கையை உன் சுற்றத்தார் முன் நீதியாகவும் சாந்த மாகவும் வழி நடத்துகிறதா? உன்னுடன் சேரும் ஜனங்கள் உன்னைத் தாழ்மையான, ஞானமான, நேசிக்கிற கிறிஸ்தவன் என்று அறிகிறார்களா? தேவனுடைய புறா உன்னிலே குடி கொண்டிருக்கிறதா? மெய்யாகவா? இது உனக்கு ஒரு வேளை கடைசி வாய்ப்பாக இருக்கும். நல்லது. 157. பீடத்தண்டை ஜெபிக்கிறவர்களே, உங்களைத் தேவன் ஆசீர் வதிப்பாராக. நீங்கள் நியாயந்தீர்க்கப்படமாட்டீர்கள். பரிசுத்த ஆவி உங்களுக்கு நியாயத்தீர்ப்பை கொண்டு வந்திருக்கிறது. உங்களுடைய உரிமையை பிடித்து நடக்காதீர்கள். ''நான் நீண்டகாலமாகக் கிறிஸ்தவனாக இருந்து வருகிறேன். பீடத்தண்டை போக எனக்கு அவசியமில்லை. எனக்கு இஷ்டமானால் நான் பாவியாகவே இருக்க எனக்கு உரிமையுண்டு. அது என் உரிமை'' என்று முதல் தடவை பீடத்துக்கு வந்தவர்கள் நினைக்கலாம். ஆம், அது உன்னுடைய உரிமை. நீ சுதந்திரமான மனிதன். நீ எப்படி நடக்க விரும்புகிறாயோ அப்படி நடக்கலாம். ஆனால் இன்று உன்னுடைய உரிமைகளைத் தியாகம் செய்! ''கிறிஸ்தவ மதத்தைப் பிரசாரம் செய்யும் என்னை இங்கே ஜனங்கள் பீடத்தண்டை போகக் காண்பார்களானால் என்ன சொல்வார்கள்?" என்று தயங்குகிறாயா? வராமலிருந்தால் உன்னைத் தேவன் என்ன சொல்லுவார்? அவர் உன்னை அழைத்தார். நீ வந்தாய். நீ இங்கே உன் உரிமைகளை விட்டு விடு பரிசுத்த ஆவி உன் இருதயத்தில் வந்து தங்கும். அவர் வரு வார் என்பது எனக்குத் தெரியும். வர வாக்குத்தத்தம் செய்துள் ளார். அழைக்கப்பட்டவர்கள் வருவார்கள். வந்தே தீருவார்கள். உன்னிலே வந்து தங்க, அவர் உனக்காக மரித்தவர், அழுதவர், கெஞ்சினவர், அவமானப்பட்டவர், உன்னில் குடியிருக்க வாஞ்சிக்கிறார். உன் மரணப்படுக்கையில் உன்னை அவர் அழைக்கிறார். 158. மரணத் தூதன் உன் கட்டிலின் கால் மீது அமர்ந்திருக்கிறான், அந்த பயங்கரமான காரியத்தை பார்ப்பதற்கு பதிலாக நீ திரும்பவும் வர ஒரு தரம் மறுத்தாய் என்று உனக்குத் தெரியும். உன் ஆத்துமா கறுத்து அழுக்காகிப் போனது. நீ வராமற்போனால், வேறொருதரம் நீ அழுது புலம்பினாலும் பயனிருக்காது. ஏசா தன் ''கிருபையின் நாளை " இழந்த பின் அதை மறுபடியும் சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும், கண்ணீர்விட்டு அழுதும், கவலையோடே தேடியும், மனம் மாறுதலைக் காணாமற் போனான் தேவன் அவனை கடைசி தடவை அழைத்திருந்தார். 159. ஆனால் நீ உன் உரிமைகளையும், உலக நண்பர்களையும் விட்டு விட்டு. உன்னுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் விட்டு இங்கே வா. ஜெபத்தில் நீ தேவனுடன் பேசவரும் போது உன்னுடைய உரிமைகளை இங்கே விட்டுவிடு கிறிஸ்து சொன்னதைக் கர்த்தருடைய வார்த்தையினால் சொல்லுகிறேன்".... என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை'' நீ பீடத்தண்டை இருக்கிறாய். மனந்திரும்பு. நீ செய்த தப்பி தங்களை அறிக்கை செய்து மன்னிப்பு கேள். 160. முழுதுமாக மனந்திரும்பாத காரணத்தால்தான் பலர் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவது இல்லை. தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்க விரும்புகிறார். நீ தாழ்மையாகவும் சாந்தமாகவும் சமாதானமாகவும் இருக்க அவர் விரும்புகிறார். ஆனால் நீ தன்னய ஆவியிலே இருப்பதால் பரிசுத்த ஆவி உனக்குக் கிடைப்பதில்லை. நீ குதித்தெழுந்து கைகொட்டி, பல பாஷைகளில் பேசி, எனக்கு பரிசுத்த ஆவி கிடைத்திருக்கிறது' என்று சொல்ல லாம். நீ மாறின மனிதனானாலொழிய, நீ எத்தனைதான் பாஷையில் பேசினாலும் என்ன பயன்? நீ தாழ்மையாக, மௌனமாக, சமாதா னமாக இருப்பது அவசியம். அப்படி இருந்தால்தான் உன்னில் பரிசுத்த ஆவி தங்கும். அடுத்த வருடம் நீ திரும்பிப் பார்த்து, நீ தேவ கிருபையில் எவ்வளவு வளர்ந்தாய் என்பதைப் பார். அதுதான் பரிசுத்த ஆவி. பரிசுத்த ஆவி யார்? அவர் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இந்த குணங்களைத் தேவனிடம் கேள். அவர் கொடுப்பார். 161. சிறுமி கண்ணே, நீயும் தேவனை கேள். உன் மீது கை வைத்திருக்கும் உன் தாயாரைத் தேவன் ஆசீர்வதிப்பாராக. 162. தலைவணங்கி ஜெபிக்கும் கறுப்பு சகோதரியே, நீ ஒரு வேளை புல்வேய்ந்த கூரை வீட்டிலோ அல்லது கட்டை வீட்டிலோ வசித்து மிகச் சாதாரண உணவை உண்டு வந்திருந்தால் சகோதரியே, உன்னைத் தேவன் ஆசீர்வதிப்பாராக. உனக்காக ஒரு அரண்மனை பரலோகத்தில் தயாராகிறது. நல்லது. 163. பீடத்தண்டை இருக்கும் முதிர்வயதான ஸ்திரீயைப் பார் வாலிப ஸ்திரீ தலைவணங்கியிருப்பதைப் பார். முழுவதுமாக நரைத்த ஸ்திரீ... ஓ, தேவனே! முழங்கால்படியிடும் மனிதனைப்பார். இங்கே பல விதமான ஜனங்கள் இருக்கிறார்கள். மனந் திரும்பு! நீ மனஸ்தாபப்படுகிறாய். என்பதை அவருக்குச் சொல். நீ அவர் கிருபையிலிருக்க, மறுபடியும் பாவம் செய்யமாட்டேன் என்று வாக்குறுதி கொடு, உன் வேற்றுமைகளை இன்று விட்டுவிட வேண்டும். நீ சாந்தமாகவும் சமாதானமாகவும் இருக்கவேண்டும். அவர் வழி நடத்தும் இடத்துக்குத் தாழ்மையுடன் போ. 164. மற்றவர்கள் சொல்வது எவ்வளவு உண்மையாகத் தோன்றினா லும், நீ தேவன் சொல்வதைக் கேள். நீ உன் அயலானுக்கு விரோத மாகப் பின்புறளி பேசாதே. நீ இயேசுவைப் பற்றி சாட்சி கொடுக்கப்போகிறாய். நீ நீதியானவைகளைச் செய்ய தீர்மானம் செய். நீ இங்கிருந்து வெளியே போகும் போது ஒரு கொலைகாரனைப் போல போகப் போவதில்லை. அப்பாவிகளைக் கொலை செய்ய போவதில்லை. நீ தேவனுக்கு வீரமுள்ள ஒரு போர்வீரனாக இருப்பாய்- உண்மையான கிறிஸ்தவனாயிருப்பாய். நல்ல கிறிஸ்த வர்களைப் போல இருக்க விரும்புவாய். நீ ஒரு கிறிஸ்தவனாயிருந் தால், நீ தானே நான் கிறிஸ்தவன் என்று சொல்வது அவசியமில்லை. நீ பேசுவதிலிருந்தும் உள்ளும் புறமும் முத்திரை போடப்பட்டு இருப்பதிலிருந்து ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள். 165. நீ உன் இருதயத்தைத் தாழ்த்தினபடியே மனந்திரும்பு. நீ உன் பாவங்களுக்காக வெட்கப்படுவதாகவும், உன் நடத்தைக்காகத் துக்கப்படுவதாகவும், இனி அப்படிச் செய்யாமலிருக்கப் போவதா கவும் தேவனிடம் சொல். பின்னர் நான் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். அப்பொழுது உங்கள் மனதில் சமாதானம் வந்து தங்கும். சமாதானம் நதியைப் போல புறப்பட்டு வந்து உன் இருதயத்தில் தங்கும். ஒரு வேளை நீ சத்தம் போடமாட்டாய். மேலேயும் கீழேயும் குதிக்கமாட்டாய். நீ இந்த பீடத்தை விட்டுப் போகும் போது உன்னிலே பரிசுத்த ஆவியுடையவனாய் போவாய். நீ உயிரோடிருக்கும் வரை அது உன்னை அந்த பழைய சிலுவையுடன் நங்கூரமிட்டு விடும். பாவ அறிக்கை செய், நான் ஜெபிக்க, நீயும் ஜெபம் செய். 166. பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே, தகுதியற்ற பிராணி களாகிய நாங்கள் புழுக்கமாக இந்த வேளையிலே உம்மண்டை வருகிறோம். பாவத்தை எங்களிலிருந்து வியர்வையைப் போல வடியவிட்டீர். பரிசுத்த ஆவி வந்து இவர்களின் குறைகளை எடுத்துக் காட்டி அவர்கள் பாவஞ் செய்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டினது. இவர்களில் கர்வமான ஆவியிருந்தது. இவர்களில் பகை இருந்தது எல்லாம் தெரிந்தவர்கள் என்ற பெருமை இவர்களை மனந்திரும்பக் கூடாமல் பிடித்துக் கொண்டிருந்தது. பகைஞரை மன்னிக்க முடியாமல், அவர்களுக்கு விரோதமான காரியங்களைச் செய்து வந்தார்கள். இவர்கள் மனந்திரும்ப மனமற்றிருந்தார்கள். ஆனால் இன்று உம்முடைய பரிசுத்த ஆவி உம்முடைய வார்த்தையை எடுத்து இவர்களுடைய இருதயத்தில் பதிய வைத்தார். அவர் இவர்களை நோக்கி, 'முதல் தடவை பீடத்துக்கு வந்து மனந்திரும்பின நீ வா, நீ எல்லாரையும் நேசித்த அந்த பழைய சுபாவத்துக்குத் திரும்பி வா. நீ எடுப்பட்டுப் போகாத அன்பினால் என்னை நேசிக்கிறாயா? அப்படியானால் நீ எழுந்து பீடத்துக்கு வா' என்று சொல்லி இவர்களை அழைத்தார். இவர்கள் வந்திருக்கிறார்கள். கர்த்தாவே. 167. இவர்களுடைய எண்ணங்களைச் சுத்தப்படுத்தும்படி வேண்டுகிறேன். இருதயங்களைச் சுத்தம் செய்யும். இருதயங்களைச் சமாதான முள்ளவைகளாகவும் நற்குணமுள்ளவைகளாகவும் மாற்றியருளும். இவர்கள் இங்கிருந்து எழுந்து போகுமுன் இவர்களுடைய மனங்களைத் திருப்பியருளும். தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக ஒப்படைக்கச் செய்யும். இவர்கள் திரும்பி தங்கள் வீட்டிற்குப் போகும் போது, புருஷன் கோபித்தாலும், மனைவி கோபித்தாலும், அயலான் கோபித்தாலும், சொந்தக்காரர் கோபித்தாலும், இவர்கள் புறாவைப்போல சாந்த குணமுள்ளவர்களாயிருக்கச் செய்யும். 168. எப்படியானாலும் நீதியைச் சரிகட்டுகிறவர் நீரே. பழிவாங்குகிறவர் நீரே. இது சத்தியம் என்பதை, தேவரீர், நாங்கள் அறிந்து கொண்டோம். ஜனங்களே, மௌனமாக நில்லுங்கள். நற்குணராக இருங்கள். தேவனைத் தேடுங்கள். அவருடைய ஆட்டுக்குட்டியினிடம் வாருங்கள். உண்மை! கட்டாயம்! மேய்ப்பன் தன் மந்தைக்குத் தன் உயிரைக் கொடுக்கிறான். அவர் வந்து தமது மந்தையை வழி நடத்துவார். அவரை விட்டுத் தாண்டிப் போகிறவனுக்கு ஐயோ! மனந்திரும்பின பிள்ளைகளுக்கு விரோதமாகச் செய்கிறவனுக்கு ஐயோ! என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின்.'' ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும்" சிறுவருக்குரிய 'தேவ தூதர்கள் பரலோகத்திலே என் பிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள்'. தேவரீர், நீர் இவர்களுக்குச் செய்வது போலவே எனக்கும் செய்தருளும். 169. தேவரீர் நான் நற்குணமுள்ளவனாயிருக்க இன்று காலை இந்த பீடத்தின் மீது நிற்கிறேன். இன்று காலை மாத்திரமல்ல, ஒவ்வொரு காலை வேளையிலும், ஒவ்வொரு நாளும் நான் மௌனமாகவும் நற்குணமுள்ளவனாயும், இயேசுவைப்போல இருக்கக் கிருபை செய்யும். பிதாவே அப்படி இருக்க உதவி செய்தருளும். அன்பின் ஆழமான அலைகள் எங்கள் உள்ளத்திலே புரண்டோடச் செய்தருளும். அமைதி, அமைதி, அதிசயமான அமைதி; பிதா அனுப்பின அமைதி (இதை நீங்கள் அனுபவிக்கிறீர்களா?) என்றென்றும் என் ஆவியின் மேல் அமைதி, அமைதி, அதிசயமான அமைதி 170. 'நானும் தூஷிக்கப்பட்டிருக்கிறேன் என்று சபைக்குச் சொல் பியானோ வாத்தியம் என்னுடைய பலிப்பீடம், எனக்காக சபையை ஜெபிக்கச் சொல்' என்று சகோதரி கெர்ட்டி மூக்குக் கண்ணாடியின் கீழ் கண்ணீர் வடித்து அழுதாள். இந்த பிரசங்கமேடை என் பலிபீடம், நான் மனந்திரும்பினேன். அழுது என் வேதாகமத்தை ஈரமாக்கினேன். ஓ... தெய்வ சமாதானம்!... தெய்வ சமாதானம் 'பிதா அனுப்பின அமைதி. (ஓ... அல்லேலூயா!)... என்றென்றும் என் ஆவியின்மேல் ...' 171. தேவனே, நான் உமக்கும் வேறொருவருக்கும் விரோதமாகப் பாவம் செய்திருந்தால், அதைக் கழுவியருளும். கர்த்தாவே என்னுடைய சிறிய சபையிலிருந்து பாவத்தை விலக்கும். 172. பாவம் மன்னிக்கப்பட்டதென்றும், சமாதானப் புறா மறுபடியும் வந்து இருதயத்தில் உட்கார்ந்ததென்றும் எத்தனை பேர் உணருகிறீர்கள்? புறா மறுபடியும் பறந்து வந்து இருதயத்தில் உட்கார்ந்தது. பரிசுத்த ஆவி திரும்பி வந்து இவ்வண்ணம் கூறுகிறது. "என் குழந்தையே, எந்த நேரத்திலும் நான் உன்னை நேசிக்கக் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீ என்னை நேசிக்கவில்லை. உன்னு டையத் தன்னய ஆவியுடன் என்னால் தங்கியிருக்கக் கூடவில்லை. உன்னை முழுவதுமாக ஒப்படைத்ததாலே நான் இன்று காலை திரும்பி வந்தேன். இதை எத்தனைபேர் உணருகிறீர்கள்? கைகளை உயர்த்துங்கள் பார்ப்போம்! நல்லது. பலிபீடத்தின்மேல் இத்தகைய விசுவாசம் நேர்த்தியானது. சபையோரில் எத்தனைபேர் இவ்வண்ணம் உணருகிறீர்கள்! கைகளை உயர்த்துங்கள்? எத்தனையோ பேர்! 173. பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, இத்தகைய பயபக்தி யான சமர்ப்பணத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம் ஆப்பிள் பழத்தைக் கையிலெடுத்து நசுக்கிக் குழந்தைகள் தின்னக்கூடிய அளவுக்கு செய்வது போல, நீர் எங்களுடைய இருதயத்தை செய்ததால் நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே இத்தைகைய நொறுங்குண்ட இருதயமே எங்களுக்குத் தேவை. எங்களை உமது காயப்பட்ட கைகளிலெடுத்து இவ்வண்ணம் கூறும்: "குழந்தாய், நீ என்னை மனம் நோகச் செய்தது உனக்குத் தெரியாதா? நீ என்னிடத்திலிருந்து பிரிந்து போய்த் தாறுமாறானவைகளைச் செய்து என்னைத் துக்கப்படுத்தினாய், குழந்தையே, என் இருதயத் திலிருந்து இரத்தம் வடிந்தது. நீ செய்யும் தவறுகளால் நான் காணப்பட்டேன். இன்று உன்னுடைய இருதயம் என் கையிலுள்ளது. அதைத் தாழ்மையுள்ளதாக்குவேண். பின்னர் அதை உபயோகிப்பேன். அதிலே வாசம் பண்ணுவேன். இன்று நான் திரும்பிப் பறந்து வந்து உன்னில் குடியிருக்கிறேன்... என்னுடைய குடியிருப்பு உன்னி லுள்ளது. தேவனே, அவ்வண்ணமே நீர் எங்களில் குடியிருந் தருளும். இதை உம்முடைய மகிமைக்காகச் செய்யும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தினாலே வேண்டிக் கொள்கின்றோம். "இயேசுவைப்போல இருக்க... (இதைப்போல துதிக்க உங்களுக்கு விருப்பமில்லையா? ஓ, என் ஆத்துமா நீராடுகிறது) இவ்வுலகில் நான்... (இவ்வாறு துதிக்கிறவர்களில் அவர் இறங்கி வருவதைக் காண்கிறேன். உங்களுடைய இருதயம் உண்மையில் மெதுவாய் உணர்கிறது என்று இருதயம் வேகமாயத் துடிக்கிறது). ..... பயணம்... மண்ணிலிருந்து மகிமைக்கு வேண்டுகிறேன் நான் அவரைப் போல் இருக்க" நாம் பாடிக்கொண்டிருக்கையில் உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? "இயேசுவைப்போல் இருக்க, இயேசுவைப்போல இருக்க (சகோ. ஜோ, நீ இந்தக் காலையில் இங்கே வந்து ஜெபிக்க விரும்புகிறீரா? சகோ, ஜோ, பீடத்தண்டை ஓர் இடத்தைப்பிடித்து உட்கார வழி செய்யட்டுமா? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக) .... பயணம்... மண்ணிலிருந்து மகிமைக்கு வேண்டுகிறேன் நான் அவரைப் போல் இருக்க." 174. நண்பர்களே, புழுக்கமாக இருந்தபோதிலும் நான் உணருகிறது போலவே இந்நேரத்தை நீங்களும் உணருங்கள். ஆனந்தத்திலே நான் பறந்து விளையாட விழைகின்றேன். அவர் எவ்வளவு அன்பானவர்! நான் அவருக்கு என்ன செய்யக்கூடும்? நான் எங்கே போய்ச் சேருவேன்? ஓ, தேவனே, நான் எங்கே போகிறேன்? நான் எங்கே போய்ச் சேருவேன்? 100 வருடங்களுக்குப் பிறகு நான் எங்கே இருப்பேன்! இவரில்லையானால் எனக்கு வேறொரு புகலிடமும் ஏது? "பெத்தலையின் தொழுவத்தில் உதித்தவர் வானவரே இவ்வுலகில் விரும்புகிறேன் அவரைப்போல் இருக்க என் ஜீவிய பிரயாணத்திலே மண்ணிலிருந்து மகிமைக்கு வேண்டுகிறேன் நான் அவரைப் போல் இருக்க இப்போது எல்லோரும் சேர்ந்து: "ஏசுவைப்போல் இருக்க, ஏசுவைப்போல் இருக்க இவ்வுலகில் விரும்புகிறேன். அவரைப்போல் இருக்க என் ஜீவிய பிரயாணத்திலே மண்ணிலிருந்து மகிமைக்கு வேண்டுகிறேன் நான் அவரைப்போல் இருக்க" 175. நீங்கள் தலைவணங்கியிருக்க, நான் உங்களிடம் சிலவற்றைக் கேட்கப் போகிறேன். இங்கே யாரோ ஒருவர் பரிசுத்த ஆவியைப் புண்படுத்துவதை அறிகிறேன். யாரோ ஒருவர் அழைக்கப்பட்டு இருக்கிறார். (தேவனுடைய தீர்க்கதரிசியாகிய நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சொல்லுகிறேன்) அவருடைய இருதயம் புண்பட்டுள்ளதை உணருகிறேன். அங்கே வெளியே, யாரோ அவருக்குக் கீழ்ப்படியவில்லை. நீ வந்திருக்கவேண்டும், நீ வரமாட்டாயா? "என் ஜீவிய பிரயாணத்திலே மண்ணிலிருந்து .... (ஆம் சகோதரியே; இன்னும் வர இருக்கிறார்கள்) .... மகிமை வேண்டுகிறேன் நான் அவரைப்போல் இருக்க. (இங்கே இப்போது வரமாட்டாயா? நீ வரவேண்டுமென்று தேவன் ஆசிக்கிறார். உங்களில் பலர் வரவேண்டும் ) என் ஜீவிய...'' 176. நீ வருவாய் என்று அறிந்திருந்தேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! நீ வரவேண்டியிருந்தது. சபையின் மேல் ஒரு கறுப்பு நிழல் இருப்பதைக் கண்டேன். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். என்மேல் இப்பொழுது இருக்கிறார். யாரோ ஒருவர் பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துகிறார். "இயேசுவைப்போல் இருக்க..." 177. அவர் என்ன செய்தார்? பிதா அனுப்பின இடத்துக்குச் சென்றார். சகோதரனே, உன்னைத் தேவன் ஆசீர்வதிப்பாராக. என் சகோதரரே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நல்லது முன் வந்து முழங்கால் படியிடுங்கள். "உலகினில் அவரைப்போல் இருக்க ஏங்குகிறேன்...'' 178. பண்டைய கால பாவ அறிக்கையைப் போல செய்ய இதுவே சமயம் மனந்திரும்பி திருத்திக்கொள். வா! இன்னும் அநேகர் வர இருக்கிறீர்கள் என்பதை உணருகிறேன். ஸ்திரீயே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னைத் தேவன் ஆசீர்வதிப்பாராக நல்லது! பரிசுத்த ஆவியானவர் செய்வது எப்போதுமே சரி. வா, நல்லது. மேல் நோக்கி வா. "ஏசுவைப்போல் இருக்க, ஏசுவைப்போல இருக்க பூமியில் ஏங்குகிறேன்... (ஓ என் கர்த்தாவே, அது நல்லது, அதுதான் வழி முழங்கால்படியிடு இடத்தை நிரப்புங்கள். முன் வந்து ஜெபியுங்கள். ... ஜீவிய பிரயாணத்தில் மண்ணிலிருந்து மகிமைக்கு. (மனந்திரும்பி விடு. நீ வருந்துகிறதாகத் தேவனுக்குச் சொல். நீ செய்ய வேண்டியது அது மாத்திரமே) "அவரைப்போல் இருக்க" 179. வந்து கொண்டே இருக்கமாட்டீர்களா? எல்லாவற்றையும் கிழித்தெறிந்துவிட்டு, தேவனுக்காக வந்து நில். "... போல் இருக்க..." 180. என்ன செய்யப்போகிறாய்? அன்று உனக்காக யார் நிற்கப் போவது? அன்று என்பது இன்றிரவாகிவிட்டால்? மரணம் வந்ததும் உனக்காகப் பரிந்து பேசப் போவது யார்? நீ என்ன செய்திருந்தாலும் சரி. உன் அருகில் பரிசுத்த ஆவியானவர் உட்கார்ந்திருக்கிறார். அவரே உன்னை அழைக்கிறார். "என் ஜீவியப் பயணத்திலே மண்ணிலிருந்து மகிமைக்கு...'' 181. மனந்திரும்பி இப்படி ஜெபி. வருந்துகிறேன். இனி இப்படிச் செய்யமாட்டேன். இன்று நான் உமக்காக நிற்கவில்லையானால், நீரும் எனக்காக நிற்கமாட்டீர். நீர் எனக்காகப் பரிந்து பேச வேண்டுகிறேன். நானும் இன்றையிலிருந்து உத்தம கிறிஸ்தவனாக வாழ்வேன். நான் என் வழிகளைத் திருத்திக் கொள்வேன். நான் சாந்தமாகவும் மனத்தாழ்மையாகனாவும் இருப்பேன் எவர்கள் என்ன சொன்னாலும் நான் மௌனமாக இருப்பேன். உம்முடைய சமூகத்தில் தாழ்மையாகவும் சமாதானமாகவும் வாழ்வேன். நீ எவ்வளவு காலமாக உன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு வந்திருந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலை இல்லை இன்று இயேசுவுக்காக நிற்க வா. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக மேல் நோக்கி வா. 182. தேவன் உன்னுடன் பேசுகிறார். ''நீ என்னைத் தேவனுடைய ஊழியன் என்று விசுவாசிப்பாயானால் ...'' பரிசுத்த ஆவியானவர் இன்று காலை என்னிடம் பேசி இவ்வண்ணம் சொல்லி உங்களை அழைக்கச் சொன்னார். இங்கே பலர் இருக்கிறீர்கள். இதுவே இரட்சிப்பின் நாள்! இதுவே இரட்சிப்பின் சமயம்! ஐந்து அல்லது ஆறுபேர் பின்னால் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் வரவேண்டும். சகோதரனே, சகோதரியே, நான் உங்களை நேராகப் பார்க்கிறேன். ஞாபகமிருக்கட்டும், இருண்ட நிழல் உங்கள் மேல் தொங்குகிறதை நான் காண்கிறேன். வருவது உங்களுக்கு நலமாயிருக்கும். 183. இயேசுவைப்போல இருக்கவேண்டும். அப்படி இருக்க உங்களுக்குப் பிரியமில்லையா? சாந்தமாகவும், தாழ்மையாகவும், மௌனமாகவும், நற்குணனாகவும், நீ இருக்கவேண்டும். வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. குழந்தையை ஏந்தியிருக் கும் தகப்பனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. பாவியாகிய நண்பனே, உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. நல்லது பீடத்தின் மேல் ஏறிவா. ஒரு இடத்தில் நில். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 184. அன்புள்ள சகோதரியே, பல நன்மைகளுக்காக நீ தேவனுக்கு நன்றியறிதலாய் இருக்கவேண்டி இருக்கிறாய். நீ படுக்கையில் சாகும் தருணத்தில் இருந்தாய். இன்று நீ நடந்து பீடத்துக்கு வருகிறாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 185. சபை நடுவில் பரிசுத்த ஆவி பேசுகிறார். மனந்திரும்ப தேவனை முழு பலத்தோடு கூப்பிடு. நீ உன் சொந்த ஜெபத்தையே ஜெபிக்கவேண்டும். நீ செய்த பாவத்துக்காக வருந்துகிறாய். என்பதை தேவனுக்குச் சொல் உன்னைச் சுற்றிலுமுள்ளவர்களைக் குறித்து கவலைப்படாதே. "தேவனே எனக்கு மன்னியும்" என்று மாத்திரம் சொல். "முன்போல நான் இருக்கப் பிரியப்பட வில்லை. நான் சாந்தமாக இருக்கப் பிரியப்படுகிறேன் உம்மைப் விட்டுப் போய் இனி எந்த சண்டையையும் இழுக்கமாட்டேன்'' என்று சொல். 186. ஓ, தேவரீர், பரிசுத்த ஆவியை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்! பரலோகத்திலுள்ள பிதாவே, பீடத்தண்டைத் தலைவணங்கி ஜெபிக்கும் ஒவ்வொருவருக்காகவும் வேண்டிக்கொள்கின்றேன். ஓ தேவனே! பிதாக்களும் தாய்மார்களும் பிள்ளைகளும், அயலாரும் சபை அங்கத்தினரும் பிரசங்கிகளும் சபை ஊழியர்களும்.... இந்த மனந்திரும்புதலின் காலத்திலே இன்று காலை இந்தப் புழுக்கமான அறையிலே.... பரிசுத்த ஆவியானவர் வந்து சமாதானத்தை நிரப்ப கிருபை செய்யும். ஓ, தேவனே! "ஆம், நீ அன்று எனக்காக நின்றாய். இப்பொழுது நான் உனக்காக நிற்கிறேன்'' என்று நீர் அந்த நாளில் அன்புடன் சொல்ல நான் கேட்க விரும்புகிறேன். அந்த அமைதியை இன்று இங்குள்ள எல்லா இருதயங்களிலும் வரச்செய்ய வேண்டுகிறேன். தேவனே, நீர் மெதுவாகவும் நிசப்த மாகவும், இக்காரியத்தைச் செய்ய வேண்டுகிறேன். இவர்களின் வீடு புதிதாகட்டும். மனிதர் புதிதாகட்டும். இன்று எல்லாம் புதிதாவதாக. ஏனென்றால் இவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள். " என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால் அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்'' (2 நாளாகமம் 7:14) தேவனே, இன்று நீர் அப்படியே செய்ய வேண்டுகிறேன். 187. பீடத்துக்கு வரவேண்டியிருந்தும், தங்கள் இடத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கிறவர்களை மன்னிக்க வேண்டுகிறேன். தேவனே, நீர் அவர்களிடம் பேசியருளும். அவர்கள் ஒரு முடிவுக்கு வரும்வரை சமாதானமற்று இருப்பார்களாக. அவர்கள் உம்மிடம் வந்து சரிப்படக் கிருபை செய்தருளும், கர்த்தாவே இப்பொழுது ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தருளும். இன்று காலை மனந்திரும்பித் தலை வணங்கி ஜெபித்த ஒவ்வொரு ஆத்துமாவிலும் உமது கிருபையும் அன்பும் தங்குவதாக. 188. பிதாவாகிய தேவனே, இதை நான் நீர் சொன்னபடியே செய்தேன். நான் இவர்களை அழைத்தேன். இவர்கள் உமக்காக நிற்கிறார்கள். "மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும்... பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்'' என்றீர். இங்குள்ளவர்களில் பலர் பல ஆண்டுகளாகக் கிறிஸ்த வர்களாக இருந்து வருகிறார்கள். அவர்கள் இன்று தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு நிற்கிறார்கள். பாவத்தினிமித்தம் உம்மால் நேசிக்கப்படத்தக்காதவர்களாக ஆகியிருந்தார்கள். பரிசுத்த ஆவி இவர்களை விட்டுவிட்டு இருந்தது. பலமுறை அவர்கள் நற்குணராகவும் தாழ்மையுள்ளவர்களாயும் இருக்க முடியவில்லை. பலர் பாவிகளாயிருந்தும் முதல் தடவை முன் வந்துள்ளனர். பிதாவே, இவர்கள் அந்த ஆச்சரியமான உணர்வை விரும்பு கிறார்கள். ''எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்'' (பிலி.4:7) இன்று இவர்களுக்குக் கொடுத்தருளும். தேவனாகிய கர்த்தாவே, இங்கிருந்து புறப்பட்டுப்போய் அன்பாகவும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாயும் தங்கள் தங்கள் வீட்டிலே புதிய ஜனமாக புதிய ஜீவியம் செய்ய அருள் புரியும். இதைக் கிறிஸ்துவின் நாமத்திலே வேண்டிக்கொள்கிறோம். 189. "ஊற்றண்டையில் ஒரு அறை" அது சரி, பீடத்தண்டை உள்ளவர்களே, நீங்கள் எழுந்து தேவனை நோக்கிப் பார்த்து திரும்பி உங்களை சூழந்திருக்கும் எல்லோரிடமும் கைகளைச் குலுக்குங்கள், ஓ, சுகமாக்கும் ஆராதனைக்கு முன்பாக நாம் சற்று எழுந்து நின்று பாடப்போகிறோம். ''அறை அறை ஆம் அங்கு ஓர் அறை உனக்காக ஊற்றண்டை ஓர் அறை உள்ளது. "அறை அறை ஆம் அங்கு ஒர் அறை உனக்காக ஊற்றண்டை ஓர் அறை உள்ளது. (எல்லோரும் ) "அறை அறை ஆம் அங்கு ஓர் அறை உனக்காக ஊற்றண்டை ஓர் அறை உள்ளது. "அறை அறை ஆம் அங்கு ஓர் அறை உனக்காக ஊற்றண்டை ஓர் அறை உள்ளது. "அறை அறை ஆம் அங்கு ஓர் அறை (ஒலிநாடாவில் காலி இடம்- ஆசி) 190. ஒரு விசுவாசம்! உமக்கு தெரியுமா சகோதரனே, உமக்கு ஜெபம் செய்யப்பட உம் மனைவி ஒருநாள் அழைத்தபோது? அந்த அறைக்குள் நேராகச்சென்ற போது, பரிசுத்த ஆவியானவர் என்னிடம் "பயப்படாதே" என்று கூறினார். ஆமென். அவர் உண்மையானவரல்லவா? அற்புதம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அந்த வெற்றியை சத்தமிட்டு கூவவேண்டும் போலுள்ளது! அது சரி. அவருடைய இரத்தம் வெண்மையாகக் கழுவும்... (அதைத்தான் அவர் கூறினார்) இயேசு இரட்சிக்கிறார் 191. சரி, இப்பொழுது சகோ. நெவில், சகோ. ஸ்லாட்டர் சில வார்த்தைகளை கூற இருக்கிறார் சகோ. ஸ்லாட்டர் பேசுகிறார் ஆசி) கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (நீங்கள் எல்லாரும் பெற்றுக் கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று சகோ. நெவில் கூறுகிறார் - ஆசி). அல்லேலூயா மகிமை! (சகோ. நெவில் இராப்போஜனமும், கால் கழுவுதலும் இன்றிரவு இருப்பதாக கூறி "சகோ. பிரான்ஹாமே நீ அங்கே இருப்பீரா?" என்று கேட்கிறார் "ஆசி) எங்கேயாவது அழைக்கப்பட்டாலொழிய எனக்குத் தெரிந்த வரை அநேகமாக இன்றிரவும் இங்கிருப்பேன். 2